பாழடைந்த கிணறு: யாழில் பாழடைந்த கிணற்றில் காத்திருந்த பேரதிர்ச்சி!

0
101

பாழடைந்த கிணறு: யாழில் பாழடைந்த கிணற்றில் காத்திருந்த பேரதிர்ச்சி!

யாழ்ப்பாணம் , அராலி பிரதேசத்தின் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து வெடிப்பொருட்கள் சில பாதுகாப்பு படையினரால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வயல் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த கிணற்றை சுத்தம் செய்த உரிமையாளருக்கு வெடிப்பொருட்கள் தென்பட்டுள்ளதுடன் , அது தொடர்பில் உடனடியாக பாதுகாப்பு படைக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி , விரைந்து வந்த சிறப்பு அதிரடிப்படையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவினரால் குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது , டீ56 ரக தோட்டாக்கள் 14 ஆயிரத்து 992ம் , எம்.பீ.எம்.ஜீ தோட்டாக்கள் ஆயிரத்து 60ம் மோட்டார் குண்டுகள் 22ம் , 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு சார்ஜர் 10ம் , 40 மில்லிமீற்றர் க்ரைனட் லான்சர் தோட்டாக்கள் 15 உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடிப்பொருட்கள் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருட்கள் காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினரால் செயலிழக்க வைக்கவுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

குறித்த வெடிப்பொருட்கள் விடுதலை புலிகளால் அந்த கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: