பாரவூர்தியுடன் பேருந்து மோதுண்டதில் கோர விபத்து!

0
40

பாரவூர்தியுடன் பேருந்து மோதுண்டதில் கோர விபத்து!

வரகாபொலை பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பேபுஸ்ஸ – குருநாகல் வீதியில் தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட, இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து, எதிர் திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்தவர்களில் 10 பேர் காயமடைந்து, வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் மாவனல்லை பிரதேசத்தினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: