பாகிஸ்தானிய 6 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் அதிரடி திருப்பம்

0
79

பாகிஸ்தானிய 6 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் அதிரடி திருப்பம்

பாகிஸ்தானில் 6 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பொலிசார் கைது செய்த நிலையில் அவரது குடியிருப்பை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

பெருந்திரளான பொதுமக்கள் குறித்த நபரின் வீட்டை முற்றுகையிட்டதால் அப்பகுதிக்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் ஜனவரி துவக்கத்தில் மத வகுப்பில் இருந்து குடியிருப்பு நோக்கி நடந்து சென்ற 6 வயது சிறுமி Zainab மர்ம நபரால் கடத்தப்பட்டார்.

இதனையடுத்து சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்தனர். இதனிடையே 5 நாட்களுக்கு பின்னர் சிறுமியின் உடல் குப்பை மேட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த விவகாரம் பாகிஸ்தானில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி பொதுமக்கள் நாட்டின் பிரதான சாலைகளில் போராட்டத்தில் குதித்தனர். மட்டுமின்றி நாட்டின் முக்கிய தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட டி.என்.ஏ ஆதாரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சிறுமி Zainab-ன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள பகுதியில் குடியிருக்கும் இம்ரான் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் சிறுமியை கடத்தியதும் கற்பழித்தது கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இளைரின் கைது சம்பவம் வெளியானதும் திரண்ட பொதுமக்கள் குறித்த இளைஞரின் குடியிருப்பை முற்றுகையிட்டுள்ளனர்.

முன்னதாக சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த இளைஞரை கைது செய்துள்ள பொலிசார், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவித்துள்ளனர்.

இதனைடுத்து தனது தாடியை மழித்துக் கொண்டு அடையாளம் தெரியாதவகையில் குறித்த நபர் நடமாடியுள்ளார்.

இருப்பினும் டி.என்.ஏ ஆதாரங்களின் அடிப்படையில் பொலிசார் மீண்டும் அவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6 வயது சிறுமி
6 வயது சிறுமி
சிறுமியை கற்பழித்து கொலை
சிறுமியை கற்பழித்து கொலை
சிறுமியை கொலை
சிறுமியை கொலை
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: