பஸ்கள் நேருக்குநேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் பலி 24 பயணிகள் படுகாயம்!

0
50

பஸ்கள் நேருக்குநேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் பலி 24 பயணிகள் படுகாயம்!

ஹெதூர் பகுதியில் அரசு சொகுசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 24 பயணிகள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– பஸ்க
டிசம்பர் 06, 2017, 03:00 AM
ஹாசன்,

ஹெதூர் பகுதியில் அரசு சொகுசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 24 பயணிகள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

பஸ்கள் மோதல்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு கர்நாடக அரசு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா ஹெதூர் பகுதியில் மங்களூரு–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே ஒரு தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக அரசு சொகுசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் 2 பஸ்களின் முன்பகுதியும் அப்பளம்போல் நொறுங்கின.

2 பேர் பலி
இந்த விபத்தில் அரசு சொகுசு பஸ்சில் பயணித்து வந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் இரண்டு பஸ்களிலும் சேர்த்து 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவ இடத்தில் பலியானது அரசு சொகுசு பஸ்சில் பயணித்து வந்த பாத்திமா(வயது 27), கார்த்திகா ரெட்டி(32) ஆகியோர் என்பதும், அவர்கள் 2 பேரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

சோகம்
இதற்கிடையே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிருக்கு போராடிய மற்றொரு பயணியான யசோதா பட்(40) என்பவரும் பலியானார். இதனால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3–ஆக உயர்ந்தது. மீதி 24 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சிலர் மேல்சிகிச்சைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு சொகுசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகி 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: