பள்ளி மாணவனும் மாணவியும் ரப்பர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை!! காரணம் என்ன?

0
90

பள்ளி மாணவனும் மாணவியும் ரப்பர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை!! காரணம் என்ன?

தெற்கு திரிபுரா ராதாநகர் கிராமத்தை சேர்ந்தவர் பிஸ்வஜித் பிஸ்வாஸ் (வயது 16) இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் தாராமணி பில் (வயது 15) என்ற மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் கடந்த 6 மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் மாணவ மாணவியின் காதலை பெற்றோர் கண்டித்தனர்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி இருவரும் காணாமல் போயினர். இந்த சம்பவம் தொடர்பாக பி.ஆர். பாரி காவல் நிலையத்தில் இருவரது பெற்றோரும் புகார் அளித்தனர். காணாமல் போன காதல் ஜோடியை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் பிஸ்வஜித் பிஸ்வாஸ் வீட்டின் அருகே உள்ள ரப்பர் தோட்டத்தில் ஒரே மரத்தில் காதல் ஜோடி கள் தூக்கில் தொங்கியதை கண்டு அவ்வூர் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு இருவரது உடல்களும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது .

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: