பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 6-ம் வகுப்பு மாணவி!

0
103

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனியார் பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுவன் ஹிர்திக் சர்மாவை அதே பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி கழிவறைக்கு அழைத்து சென்று கத்தியால் தாக்கிய சம்பவம் வெளியே தெரியவந்து உள்ளது. இச்சம்பவம் நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்று உள்ளது. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என்ற நோக்கில் சிறுமி, ஹிர்திக் சர்மாவின் உடலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோர்களிடம் நடந்த விபரத்தை கூறிஉள்ளான். இதனையடுத்து அவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர், நிர்வாகம் சம்பவத்தை மூடிமறைக்க முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து விசாரணையை தொடங்கிய போலீஸ் பள்ளியின் தலைவர் ராஷித் மானாத் கைது செய்யப்பட்டார். அலட்சியமாக இருந்ததாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். சிறுமியையும் போலீஸ் பிடித்து உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவனக்கு நெஞ்சு, வயிறு மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் உள்ளது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையை கடந்து சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். மருத்துவர்கள் அவனை தொடர்ச்சியாக கவனித்து வருகிறார்கள். சிறுவன் தெரிவித்த தகலின்படி பள்ளிக்கு விடுமுறைவிட வேண்டும் என்பதற்காக சிறுமி இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.

“உன்னை நான் தாக்கினால் உனக்கு காயம் ஏற்படும் அதற்கு பின்னர் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து விடுவார்கள்,” என சிறுமி சிறுவனிடம் கூறியதாக தெரியவந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் போலீஸ் சிறுமியை சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்புகிறது.

சிறுமியின் தலைமுடி சிறுவன் மீது இருந்து உள்ளது, ஆய்வு செய்கையில் சிறுவனை தாக்கியது சிறுமிதான் என்பது உறுதியாகி உள்ளது.

பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளது, ஆனால் சிறுவன் தாக்குதலுக்கு உள்பட்ட கழிவறை சிசிடிவி வளையத்திற்குள் வரவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: