பல காலமாக செல்போன் திருட்டில் ஈடுபட்டுவந்தவர்கள் கைது!!

0
56

பல காலமாக செல்போன் திருட்டில் ஈடுபட்டுவந்தவர்கள் கைது!!

சென்னையில் பஸ் பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் நேற்று முன்தினம் யானைகவுணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் நின்றுகொண்டிருந்த 4 வாலிபர்கள் போலீசார் வருவதை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, போலீசார் விரட்டி சென்று அந்த 4 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், வியாசர்பாடியை சேர்ந்த கார்த்திக் (22), சரவணன் (31), வினோத் (24), ஜான் (22), கார்த்திக் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் சென்னையில் பஸ் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:இவர்கள் 5 பேரும் இரண்டு குழுக்களாக பிரிந்து கூட்டம் அதிகமாக உள்ள பஸ்சில் முன்னும் பின்னும் ஏறி பயணிகளிடம் செல்போனை பறித்து மற்றவர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.

அவர்கள் திருடும் செல்போனை பெற அவர்களுக்கு பின்னால் ஆட்டோவில் வரும் கூட்டாளியிடம் கொடுத்து விட்டு, வேறு பஸ்சுக்கு தாவி விடுவார்கள். இவர்கள் திருடும் செல்போனை பர்மா பஜாரில் பழைய செல்போன் விற்பனை கடை நடத்திவரும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த முகமது அனிபா (25) என்பவரிடம் விற்று அந்த பணத்தை ஜாலியாக செலவு செய்து வந்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.பின்னர், அவர்கள் ெகாடுத்த தகவலின்படி, போலீசார் 23 செல்போன்கள், 2 ஆட்டோ, 2 ஸ்கூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: