பயங்கரம்! 16 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

0
99

பயங்கரம்! 16 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பாசில்கா மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய 16 வயது மாணவி மூன்று பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். மாணவி நீண்ட நேரம் கழித்தும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவரை தேட தொடங்கினர். பல்வேறு இடங்களில் மகளை தேடியும் கிடைக்கவில்லை. இரவு நீண்ட நேரம் கழித்து சிறுமி விவசாய நிலத்தில் கொடூரமான நிலையில் சுயநினைவு இல்லாமல் காணப்பட்டார். சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது, அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் கூறிஉள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்ற சிறுமி அதிக இரத்த போக்கு காரணமாக இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.

உயிரிழந்த மாணவி பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடைய ஒருவன் தன்னுடன் பள்ளியில் படிப்பவன் என கூறிஉள்ளார் என பெற்றோர்கள் கூறிஉள்ளனர். போலீசார் மாணவியின் சடலத்தை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர், குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: