பட்டபகலில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை!

0
84

பட்டபகலில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை!
மனிதநேயம் என்ன ஆனது?… விசாகப்பட்டினத்தில் பட்டப்பகலில் மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்!

விசாகப்பட்டினம் : பட்டபகலில் ரயில் நிலையம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை குடிபோதையில் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்வதை பார்த்தும், கதறும் அந்தப் பெண்ணை காப்பாற்ற யாருமே முன்வராத கொடுமையான சம்பவம் அரங்கேறியுள்ளது.

விசாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகே அமர்ந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் அந்தப் பெண் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக மது போதையில் வந்த 23 வயது இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை கற்பழித்துள்ளார். உதவிக்காக அந்தப் பெண் கதறிய போதும் அந்த வழியாக சென்ற யாருமே அந்தப் பெண்ணிற்கு உதவ முன்வரவில்லை என்பது தான் கொடுமையின் உச்சம். இந்த சம்பவத்தை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய செல்போனில் படம்பிடித்து போலீசாரிடம் அளித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் பதிவ செய்துள்ள காட்சியில் அந்த இளைஞர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யம் போது அந்த வழியாக சில பாதசாரிகள் சென்ற போதும் அவர்கள் தட்டிக் கேட்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் பெண்ணை பலாத்காரம் செய்த 23 வயது ஷிவாவை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் பட்டபகலில் ஒரு பெண்ணிற்கு நடக்கும் கொடுமையை கண்டும் காணாமல் செல்லும் பாதசாரிகளை பார்க்கும் போது மனிதநேயம் மறித்து போய்விட்டதாக என்ற அச்சம் சமூகத்தின் மீது எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: