படிக்க தவறாதீர்கள் – எச்சரிக்கை..!!

0
133

படிக்க தவறாதீர்கள் – எச்சரிக்கை..!!

ஹம்பாந்தோட்டை திஸ்சமாறம பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 14 வயதான மாணவி, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்தார்.

குறித்த சிறுமி, கடந்த தினம்மொன்றில் மூன்று இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி தனது வீட்டில், கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

அதன்போது உறவினர்களால் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த மாணவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: