பச்சை மனிதனாக மாறிய இளைஞன்!! ஒரே நாளில் ஓபாமாவாக மாறினார்!!

0
73

பச்சை மனிதனாக மாறிய இளைஞன்!! ஒரே நாளில் ஓபாமாவாக மாறினார்!!

டெல்லியை சேர்ந்த கரண் என்ற 28 வயதான இளைஞர் பச்சை குத்துவதில் மிகப்பெரிய வல்லுநர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பச்சை குத்தியுள்ளார்.

தன்னுடைய 16 வயதில் பச்சை குத்திக்கொள்ள ஆரம்பித்த இவர் அப்போது முழு பச்சை மனிதனாகவே மாறிவிட்டார். அதோடு இல்லாமல் உடலில் 22 இடங்களில் துளையிட்டு வளையங்கள் மாட்டியுள்ளார். உடல் முழுதும் பச்சை குத்தியும் ஆசை தீராத கிரண் தற்போது கண்களிலும் பச்சை குத்தியுள்ளார். இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் பலரால் பகிரப்பட்டு ஓவர் நைட்டில் ஒபாமா அளவுக்கு ட்ரெண்டாகிவிட்டார்.

இதுகுறித்து இவர் கூறுகையில், வலிக்காமல் இருக்க ஊசி போட்ட பின் எந்த நிறம் வேண்டுமோ அந்த நிறத்தில் மிகவும் சூடான கலவையை கண்களில் மெதுவாக பாய்ச்சுவார்கள் என்று கூறும் கரண், கணுக்காலில் பச்சைக் குத்துவது மிகவும் கடினமான வேலை என்று கூறுகிறார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: