நோயைக் கொண்டு நோயைக் குணப்படுத்தும் புதிய முறை கண்டுபிடிப்பு.

0
128

நோயைக் கொண்டு நோயைக் குணப்படுத்தும் புதிய முறை கண்டுபிடிப்பு.

அண்மைக் காலமாக ஸிகா வைரஸ் ஆனது உலகின் பல நாடுகளை பரபரப்புக்குள் தள்ளியிருந்தது. அந்தளவிற்கு அதன் தாக்கம் அனைத்து இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஈடிஸ் வகை நுளம்பினால் பரப்பப்படும் இந்த வைரஸ் தொற்றினை லேசான காய்ச்சல், தோல் அழற்சி, இமைப்படல அழற்சி, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி என்பவற்றினைக் கொண்டு அடையாளம் காண முடியும்.
இவை ஆரம்ப கட்ட அறிகுறியாக காணப்படுகின்ற அதேவேளை உயிரைக் கொல்லும் அளவிற்கு கொடூரமான நோயாகும்.

இந்நோயை குணப்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஸிகா வைரஸினை மூளைப்புற்று நோய்க்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் ஆனது வாசிங்டன் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சான்டிகோ பல்கலைக்கழகம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: