நேரலையில் தற்கொலை செய்த நபர். மனதை உருக்கும் காரணம்.

0
85

நேரலையில் தற்கொலை செய்த நபர். மனதை உருக்கும் காரணம்.

துருக்கியில் தந்தை ஒருவர் தமது மகளின் திருமணத்திற்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் முகநூல் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய துருக்கியிலுள்ள் கெய்செரி என்ற இடத்தைச் சேர்ந்த 54 வயதான ஐஹன் உஷுன் என்பவரே முகநூல் நேரலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னர் தமது குடும்பத்தினர் குறித்து நீண்ட நேரம் நேரலையில் பேசிய அவர், ‘எனது தற்கொலைக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக எனது இறுதி சடங்கிலும் பங்குபெற வேண்டாம்’ என கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து துப்பாக்கியைத் தனது தலையில் வைத்து அழுத்தி, ”சென்று வருகிறேன், உங்களை, நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறிக் கொண்டே சுட்டுக்கொண்டார். சம்பவத்தின்போது உசுன் தனியாகவே தமது குடியிருப்பில் வசித்து வந்தார். தமது மகளின் திருமணம் குறித்து அவரது குடும்பத்தினர் தொலைபேசியில் அவருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஒரே ஒரு மகளின் வாழ்க்கையில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வு. அதை அவர்கள் தொலைபேசியில் அழைத்து தெரிவித்துள்ளதுடன், வந்து ‘விருந்துக்கு செல்லுங்கள்’ என்கிறார்கள் என வருத்தமுடன், நேரலையில் சொன்னார். மகளின் திருமணம் குறித்து எவரும் தம்மிடம் ஆலோசனை கேட்கவில்லை எனக் கூறும் அவர், எவரும் தம்மை ஒரு மனிதனாகவே மதிக்கவில்லை என்றார்.

“தொலைபேசியில் அழைத்து தெரிவிக்கும் அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன் எனத் திருப்பிக் கேட்டதற்கு, நேரில் வந்து சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை” என தனது குடும்பத்தினர் பதிலளித்ததாக அவர் வேதனையுடன் கூறினார்.

முகநூல் நேரலையில் பேசுவதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த தற்கொலையைத் தடுக்க பெரிதும் போராடினர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: