நீதிமன்றத்துக்குள்ளேயே! பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடுமை

0
92

இலங்கை நீதிமன்றத்துக்குள்ளேயே! பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடுமை

களுத்துறை நீதிமன்ற கட்டத்திற்குள் பெண் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் மாதம் 5ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதான நீதவான் பாரதி விஜேதரத்ன உத்தரவிட்டுள்ளார்.

56 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வழக்கு நடவடிக்கை ஒன்றிற்காக களுத்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகைத்தந்துள்ளார். நீதிமன்றத்திற்குள் இடவசதி போதாமையினால் நுழைவாயில் அருகில் நின்ற போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரியிடம் அறிவித்ததற்கமைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளார். இதன் போது சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியை அச்சுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு முன்னரும் குறித்த சந்தேக நபர் மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: