மாயமான இளம்பெண் நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்தார்!

0
199

மாயமான இளம்பெண் நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்தார்!

மேட்டுப்பாளையம்: கோவையில் மாயமான இளம்பெண், மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே, நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்தார்; அவரை கொலை செய்த, சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். கோவையைச் சேர்ந்த ஹைதர் செரீப் என்பவரின் மகள் ருக்ஷானா, 21. பி.எஸ்சி., பட்டதாரியான இவர், 16ம் தேதி மாயமானார். சாய்பாபா காலனி போலீசில் உறவினர்கள், 19ம் தேதி புகார் அளித்தனர். ருக்ஷானா மொபைல் போனில் இருந்து கடைசியாக, சரவணம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியரான பிரசாந்த், 25, என்பவருடன் பேசியது தெரிந்தது. பிரசாந்தை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

ருக்ஷானாவை மேட்டுப்பாளையம், கல்லாறு, பவானி ஆற்றுக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட தகராறில், கீழே தள்ளியதில், தலையில் அடிபட்டு உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். சடலத்தை ஒரு பாறையின் இடுக்கில் மறைத்து, சுற்றிலும் கற்களை வைத்து, வீட்டுக்கு திரும்பியதாகவும் தெரிவித்தார். பிரசாந்தை கைது செய்த போலீசார், நேற்று காலை கல்லாறு பகுதிக்கு சென்று, நிர்வாண நிலையில் கிடந்த ருக் ஷானா சடலத்தை கைப்பற்றினர்.
விசாரணையில், வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள நண்பரை பார்க்க, பிரசாந்த் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, ருக்ஷானாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். தற்போது, பிரசாந்த் வீட்டில் பெண் பார்க்க துவங்கியுள்ளனர். இதனால், திட்டமிட்டு ருக் ஷானாவை அழைத்து சென்று கொலை செய்திருக்கலாம் என, கருதப்படுகிறது.
ருக்ஷானா அணிந்திருந்த நகைகளையும், வாட்சையும் கழற்றிய பிரசாந்த், சிறிது துாரம் தள்ளி குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார். அப்பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். நகைக்காக வேறு யாரோ கொலை செய்துள்ளனர் என, போலீசாரை நம்ப வைக்க, அவர் நாடகம் ஆடியிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். இக்கொலையில், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: