நான் ஐஸ்வர்யா ராயின் மகன்! 27 வயது இளைஞனின் பரபரப்பு பேட்டி!

0
172

டெஸ்ட் டியூப் மூலம் ஐஸ்வர்யா ராயிக்கு லண்டனில் குழ்ந்தை பிறந்தது உண்மையா!
நான் ஐஸ்வர்யா ராயின் மகன்… 27 வயது இளைஞனின் பரபரப்பு காணொளி!

ஜெயலலிதாவின் மகள் நான் என்று அம்ருதா என்ற பெண் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது அனைவரும் அறிந்த விடயமே…

இந்த நிலையில் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மகன் என்று 27 வயது வாலிபர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவரது பெயர் சங்கீத் குமார்.

இவர் கூறுகையில், எனது தந்தை விசாகபட்டிணத்தை சேர்ந்த மவுலு ஆதிரெட்டி. எனது தந்தை ஐஸ்வர்யா ராய் உதவியுடன் டெஸ்ட் டியூப் மூலம் என்னை பெற்றெடுத்தார். ஆரம்பத்தில் இரண்டு வருடம் ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் லண்டனில் வசித்தேன்.

அதன்பிறகு எனது தந்தை என்னை விசாகப்பட்டிணத்திற்கு அழைத்து வந்து வளர்த்து வருகிறார் என்றார்.

இவரிடம் தான் ஐஸ்வர்யா ராயின் மகன் என்பதற்கான எந்த ஒரு ஆவணமும் இல்லை. மேலும் இவர் சென்னையில் சவுன்ட் இன்ஜினியராக பணிபுரிவதாகவும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: