நான்கு மணி நேர வேதனையில் கையுறையை ஈன்றெடுத்த பெண்! மருத்துவர்களை மிரளவைத்த சம்பவம்!

0
261

பிரான்ஸ் நாட்டில் 48 வயதான பெண் ஒருவர் கையுறையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தெற்கு பிரான்ஸின் மார்சேயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கர்ப்ப பை பிரச்சனை தொடர்பாக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. திடீரென்று வயிற்றில் கத்தியை கொண்டு குத்துவது போன்று வலியை உணர்ந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால், மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை ஏதும் செய்யாமல் வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

மாத்திரைகள் எடுத்துக் கொண்டும் வலி சரியாகாமல், இருந்த நிலையில், மூன்று நாட்கள் கழித்து பிரசவ வலி போன்று கொடூரமான வலியை உணர்ந்ததுடன் கையுறைகளை ஈன்றெடுத்துள்ளார்.

நான்கு மணிநேரம் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண், மருத்துவனையை நாடியுள்ளார், கடைசியாக செய்த அறுவைசிகிச்சையின் போது மருத்துவர்கள் கவனக்கோளாறால் தவறுதலாக வைத்துவிட்டது தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: