நான்கு இளைஞர்கள் 9 கிலோ கஞ்சாவுடன் கைது!!

0
108

நான்கு இளைஞர்கள் 9 கிலோ கஞ்சாவுடன் கைது!!

கஞ்­சாவை உடைமை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்­கள் நால்­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு வவு­னியா நீதி­மன்ற நீதிவான் உத்­த­ர­விட்­டார்.

வவு­னியா- கன­க­ரா­யன் குளத்­தி­லி­ருந்து காரொன்­றில் கஞ்சா கடத்­தப்­பட்­டது என்று கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் இவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி சமிந்த பிந்து தலை­மை­யி­லான குழு­வி­னர் மேற்­கொண்­டன நட­வ­டிக்­கை­யில் சந்­தே­ந­க­பர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் இருந்து 9 கிலோ 732 கிராம் கேர­ளக் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் திரு­கோ­ண­மலை, ரொட்­ட­வெவ மற்­றும், மூதூர் பிர­தே­சங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­போது அவர்­களை எதிர்­வ­ரும் 23ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்­டார்.
மேல­திக விசா­ர­ணை­களை கன­க­ரா­யன்­கு­ளம் பொலி­ஸார் மேற்­கொண்­டுள்­ள­னர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: