நாகர்கோவிலில் டுவிட்டரில் புகார் செய்த ரயில் பயணிக்கு, நெல்லையில் கிடைத்த இன்ப அதிர்ச்சி!

0
141

நாகர்கோவிலில் டுவிட்டரில் புகார் செய்த ரயில் பயணிக்கு, நெல்லையில் கிடைத்த இன்ப அதிர்ச்சி
ரயிலில் கழிப்பறை அசுத்தமாக இருந்தது குறித்து, ‘டுவிட்டர்’ வாயிலாக, பயணி ஒருவர், ரயில்வே அமைச்சருக்கு புகார் தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில்,

அமைச்சரின் உத்தரவுப்படி, கழிப்பறை சுத்தம் செய்யப்பட்டதால், ரயில் பயணியர் அனைவரும் வியப்பு அடைந்தனர்; அமைச்சரையும் பாராட்டினர்.

நாகர்கோவிலில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு, மதுரை, சேலம், தர்மபுரி வழியாக,தினசரி இரவு, 7:10 மணிக்கு,

தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின், ‘எஸ் – 3’ பெட்டியில்,ஜெகன் என்பவர் நேற்று முன்தினம் பயணித்தார்.

அவருடன் கேரள மாநிலத்தவர் சிலரும் பயணித்தனர்.அப்போது, ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறை சரியாக சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் அடித்தது. யாரும் கழிப்பறை பக்கம் செல்ல முடியாத நிலை இருந்தது.

அதனால், ரயில்வே நிர்வாகத்தை, சக பயணியர் திட்டி தீர்த்தனர். உடன், அந்த பெட்டியில் இருந்த கேரள பயணி ஒருவர், கழிப்பறையை போட்டோ எடுத்து, பயணியர் ஆத்திரம் குறித்து,

ரயில்வே அமைச்சர்,பியுஷ் கோயலின் அதிகாரப்பூர்வ, ‘டுவிட்டர்’ பக்கத்தில்,இரவு, 8:00 மணிக்கு, தன் புகாரை பதிவு செய்தார். இந்நிலையில், இரவு, 9:00 மணிக்கு, ரயில் திருநெல்வேலி வந்தடைந்தது. அங்கு ரயில் நின்றதும்,தயாராக இருந்த துப்புரவு பணியாளர்கள், ஓடிவந்து கழிப்பறையை சுத்தம் செய்தனர்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: