நம்மில் பலர் அறியாத உண்மை! இலந்தைப்பழம் ஆப்பிளை விட பலமடங்கு சத்தானது

0
176

நம்மில் பலர் அறியாத உண்மை! இலந்தைப்பழம் ஆப்பிளை விட பலமடங்கு சத்தானது

நம்மில் பலர் குறைந்த விலையில் கிடைக்கும் நல்ல பொருட்களை கூட விரும்பி உண்ணுவது இல்லை. ஏனெனில் அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்களில்தான் அதிக சத்து உள்ளதாக நினைக்கின்றன அது மிகவும் தவறு.

குறைந்த விலையில் அதிக சத்துகளை தரக்கூடிய பொருட்களில் இலந்தைப்பழம் முதல் இடத்தில் உள்ளது.

இலந்தைப் பழத்தில் இருவகை உண்டு. உருவம் இரண்டானாலும் மருத்துவப் பண்புகளிலும், சத்துக்களிலும் இரண்டும் சிறந்த்வையே.

இலந்தைப் பழத்தில் “க்ளூடாமிக்” அமிலம் உள்ளது. இது மூளையைச் சுருசுருப்பாக்கும். எனவே மூளை உழைப்பு செய்வோர்க்கல்லாம் இலந்தைப்பழம் சிறந்த பழமாகும்.

இலந்தையிலுள்ள சத்துகளை முதலில் பார்போம்.

Nutritional value per 100 gram.
Energy 331 kJ (79 kcal)
Carbohydrates 20.23 g
Fat 0.2 g
Protein 1.2 g
Vitamins சத்துகள்
Vitamin A equiv. (5%) 40 μg
Thiamine (B1) (2%) 0.02 mg
Riboflavin (B2) (3%) 0.04 mg
Niacin (B3) (6%) 0.9 mg
Vitamin B6 (6%) 0.081 mg
Vitamin C (83%) 69 mg
Minerals தாது சத்துகள்
Calcium (2%) 21 mg
Iron (4%) 0.48 mg
Magnesium (3%) 10 mg
Manganese (4%) 0.084 mg
Phosphorus (3%) 23 mg
Potassium (5%) 250 mg
Sodium (0%) 3 mg
Zinc (1%) 0.05 mg
Other constituents
Water 77.86 g

ஆப்பிள் பழத்தில் இல்லாத வைட்டமின் A உயிர்ச்சத்து இலந்தையில் நிறைய காணப்படுகிறது. நிறைய சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது. எனவே எலும்பு, பற்கள் உறுதி பெற அடிக்கடி இலந்தைப்பழம் சாப்பிடலாம்.

வயிற்றுப்போக்கு, சீதளபேதி, கீல்வாயுப் பிடிப்பு, நீரிழிவு, மலச்சிக்கல், வேட்கை முதலியவற்றிற்கு இப்பழம் நல்ல மருந்து என்று நம் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
உடல் வியர்வை நாற்றம் போக: உள்ளங்கால், அக்குள், உள்ளங்கை போன்ற இடங்களில் இலந்தை இலைகளை நசுக்கிப் பிழிந்து அந்தச் சாற்றை வியர்வை வரும் இடங்களில் தடவிக் காயவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் குளித்தோ அல்லது அந்த இடத்தை கழுவியோ வந்தால் வியர்வை நாற்றம் போகிவிடும்.

தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தப்பெருக்கு, வாய்ப்புண் இவற்றிற்கு இழந்தை இளந்தளிர்களை நீரில் போட்டு, உப்பைச் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முடி உதிர்கிறதா? சொட்டையாகிறதா? இலந்தை இலை சாற்றைத் தலைமயிரிலும், சொட்டை விழுந்த இடங்களிலும் தடவி வருக. விரைவில் முடி வளரும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: