நடிகை பானுப்பிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணம்..!

0
115

கடந்த 1990களில் ரஜினி,கமல், விஜயகாந்த், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா.

இவர் கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோ£ர்னியா மாகாணத்தை சேர்ந்த ஆதர்ஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு அபிநயா என்ற பெண் குழந்தை பிறந்தது.

2005ம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்தார். அதன்பிறகு விவாகரத்து பெற்று கைக்குழந்தையுடன் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆதர்ஷ் கடந்த 20ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: