நடிகை கோபிகா என்ன ஆனார்! ஆட்டோகிராப் படத்தில் லலிதாவாக வந்து ரசிகர்களை கட்டி போட்டவர்

0
73

நடிகை கோபிகா என்ன ஆனார்! ஆட்டோகிராப் படத்தில் லலிதாவாக வந்து ரசிகர்களை கட்டி போட்டவர்

இதனை தொடர்ந்து கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்.மகன் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை கோபிகா.

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். 1985ம் ஆண்டு பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே பரத நாட்டியம் கற்றவர்.

விமான பணிப்பெண்ணாக வேண்டும் என்ற ஆசை கொண்ட இவருக்கு கடந்த 2002ம் ஆண்டு பிரணயமணித்துவல் என்ற மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து தமிழ்இ மலையாளம், தெலுங்கு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் கடந்த 2008ல் அஜிலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகை கோபிகா
நடிகை கோபிகா
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: