நடிகையுடன் தொடர்பு, சூசனை காதலித்தேன், கோட்டல் பெண்ணுடன் தொடர்பு – பிரபல நடிகரின் ரகசியங்கள் வெளியானது.

0
136

நடிகையுடன் தொடர்பு, சூசனை காதலித்தேன், கோட்டல் பெண்ணுடன் தொடர்பு – பிரபல நடிகரின் ரகசியங்கள் வெளியானது.

தன்னுடன் நடித்த நடிகையுடன் தொடர்பு வைத்திருந்தது, ஹோட்டலில் பணிபுரிந்த பெண்ணுடன் ஒரு இரவு இருந்தது பற்றி தெரிவித்துள்ளார் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி. பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது. அவரின் மனைவி அஞ்சலி, ஷோரா என்ற மகள், யானி என்ற மகன் உள்ளார். அவ்வளவு தான் பிறருக்கு தெரியும்.

இந்நிலையில் நவாஸ் தனது வாழ்க்கையை பற்றி ஆர்டினரி லைப் என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது,மிஸ் லவ்லி படத்தில் நடித்தபோது நிஹாரிகா சிங் என்னை தன் வீட்டிற்கு அழைத்தார். நானும் சென்றேன். கதவை அவர் திறந்தபோது வீடெல்லாம் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். ஆசை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிஹாரிகா மிகவும் அழகாக இருந்தார். உடனே அவரை நேராக படுக்கையறைக்கு அழைத்துச் சென்று உறவு வைத்துக் கொண்டோம். அதன் பிறகு அவருடன் ஒன்றரை ஆண்டுகள் இருந்தேன். அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றபோது உணவகத்திற்கு சென்றேன். அங்கு பணியாற்றிய பெண் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அந்த இரவு நாங்கள் ஒன்றாக இருந்தோம்.

நியூஜெர்சி நகரை சேர்ந்த யூத பெண்ணான சூசனை காதலித்தேன். அவர் மும்பை வந்து என்னுடன் வசித்தார். அவரை திருமணம் செய்ய விரும்பினேன். ஆனால் அப்போது அவரின் சகோதரருக்கு விவாகரத்து நடந்ததால் சூசனுக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை. சூசன் விசா முடிந்ததால் சூசன் அமெரிக்கா திரும்பினார். அப்போது தான் நிஹாரிகாவுடன் தொடர்பு ஏற்பட்டது. நிஹாரிகா விஷயம் தெரிந்து சூசன் கெஞ்சினார், அழுதார்.

என் முதல் காதலியின் பெயர் சுனிதா. அந்த காதல் முறிந்ததை என்னால் தாங்க முடியவில்லை. அப்போது ரயில் நிலையத்திற்கு சென்றேன். அங்கு நின்று கொண்டிருந்தபோது ரயில் ஒன்று வந்தது. அந்த ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்ய நினைத்தேன். பிறகு மனதை மாற்றிக் கொண்டேன் என்று புத்தகத்தில் தெரிவித்துள்ளார் நவாஸ்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: