நடிகர் ரஜினிகாந்தின் சொத்துமதிப்பு தொடர்பான ஆதாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

0
76

தமிழக அரசியலில் சூறாவளியாக கிளம்பியுள்ள நடிகர் ரஜினிகாந்தின் சொத்துமதிப்பு தொடர்பான ஆதாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்களுக்கு புது உற்சாகத்தை அளித்தாலும், இன்றைய அரசியல் சூழலில் அவர் தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மட்டுமின்றி ரஜினியின் புது அரசியல் பாணியான ஆன்மீக அரசியலுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றுள்ளது ஒட்டுமொத்த தமிழகமும் அவருக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தையும் அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர்.

காரணம், தமிழகத்தில் வேரூன்றியுள்ள திராவிட அரசியலுக்கு நேரெதிரான கட்சி பாஜக என்பதே. இத்தகைய சூழ்நிலையில் ரஜினியின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்தின் தற்போதைய சொத்து மதிப்பு 360 கோடி ரூபாய் என்று ஃபின்ஆப் தகவல் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த்தின் வருவாயில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது, அதே நேரம் தான் நடித்த படம் சரியாக வசூலிக்கவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தினைத் திரும்பவும் அளித்து வருகிறார்.

சராசரியாகத் திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் 55 கோடி எனவும், முதலீடுகள் மூலமாக 110 கோடி ரூபாய், ஆடம்பர கார்கள் 3 க்கும் சேர்ந்து 2.5 கோடி ரூபாய், ஆண்டுக்கு வருமான வரி 13 கோடி என இவரது சொத்துக்கள் மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை 2002-ம் ஆண்டு ரஜினி வாங்கியுள்ளார். இதன் தற்போதிய மதிப்பு என்பது 35 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

ரேன்ஞ் ரோவர், பெண்ட்லி, மற்றும் டொயோட்டா இன்னோவா என மொத்தம் மூன்று ஆடம்பர கார்கள் மட்டுமே ரஜினி பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் வருவாயாக சுமார் 214.5 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார். இதில் 2016 ஆம் ஆண்டு மட்டும் 65 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறுப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: