தொலைபேசியில் உரையாடியவருக்கு நடந்த விபரீதம்!!

0
140

கொழும்பிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் மீது மர்மநபர்கள் கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சக மாணவி ஒருவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் தொடர்பில் ஆத்திரமடைந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர், இளைஞர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் எனவும் அவரது தந்தை ஹொரண பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் எனவும் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குக்குள்ளான 24 வயதுடைய சசிந்து பெர்னாண்டோ என்ற இளைஞர் புதுக்கடை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் இளைஞனின் நிலைமை தீவிரமடைந்துள்ளது. இதனால் அம்புலன்ஸ் வண்டியின் உதவியுடன் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காயமடைந்த இளைஞனின் பெற்றோர் புதுக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: