தென்மராட்சி இளைஞரால் நீரில் பயணிக்குக்கூடிய துவிச்சக்கர வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

0
155

நீரில் பயணிக்குக்கூடிய துவிச்சக்கர வண்டி தென்மராட்சி இளைஞரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மறவன்புலவு பகுதியை சேர்ந்த பிரபாகரன் இளைஞரே குறைந்தளவிலான வளங்களை பயன்படுத்தி
மிதக்கும் சைக்கிளை உருவாக்கியுள்ளார்.

சக்கரங்களுக்கு பதிலாக பிளாஸ்ரிக்கினாலான கொள்கலன்களை இணைத்து குறித்த சைக்கிள்
உருவாக்கப்பட்டுள்ளது

ஒருவார கால உழைப்பில் உருவாக்கப்பட்ட மிதக்கும் சைக்கிள் பிரபாகரனின் பிறந்த தினமான
இன்று நாவற்குழி பாலத்துக்கு அருகில் உள்ள நீர்ப்பரப்பின் மேல் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

பிரதேச மக்கள் பலரும் குறித்த கண்டு பிடிப்பினை ஆச்சரியத்துடன் பார்வையிட்டதுடன்
பிரபாகரனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மிதக்கும் சைக்கிளை உருவாக்க உதவிசெய்த கைதடி கஜமுகன் வெல்டிங் நிறுவனத்தினரும்
பிரதேச இளைஞர்களுக்கும் பிரபாகரன் தனது நன்றியினை
தெரிவித்தார்.

நீரில் பயணிக்குக்கூடிய துவிச்சக்கர வண்டி
நீரில் பயணிக்குக்கூடிய துவிச்சக்கர வண்டி
தென்மராட்சி இளைஞரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி இளைஞரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: