துல்லியமான ஆபிரிக்க கணிப்பின் படி! 2018 மற்றும் உங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் தெரியுமா!

0
106

துல்லியமான ஆபிரிக்க கணிப்பின் படி! 2018 மற்றும் உங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் தெரியுமா!

ஆப்பிரிக்க ஜோதிட முறையில் எழும்புகளை தூக்கி எரியும் போது கிடைக்கும் அம்புகள், கோடுகள் போன்ற வடிவங்களை வைத்து ஜோதிடம் கணித்து கூறுவதை ஜியோமன்ஸி என்று கூறுவார்கள்.

இதில் 12 ராசிகள் உள்ளதை போல, பிறந்த தேதி மற்றும் மாதத்தை கொண்டு மிக துல்லியமான பலன்களை கூறும் 12 வகைகளை ஆப்பிரிக்க ஜோதிடத்திலும் உருவாக்கியுள்ளனர்.

ஜனவரி 4 – பிப்ரவரி 3 வரை
இவர்கள் நேர்மை, தாராளம், நல்ல சிந்தனை ஆகிய குணங்களை கொண்டு இருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் அவர்கள் தங்களை பற்றி தாங்களே கவலைப்பட்டு கொள்வார்கள்.

இவர்கள் அதிகாரத்தையும், தன்னம்பிக்கையையும் முன் நிறுத்துவார்கள். ஆனால் மற்றவர்களின் எதிர்மறை சிந்தனையானது இவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

பிப்ரவரி 4 – மார்ச் 5 வரை
இவர்கள் அறிவுதிறன் மிக்க புத்திசாலிகளாக இருப்பார்கள். சில நேரங்களில் இவர்களது கோபமானது பலரை தாக்குவதாக அமையும்.

ஆனால் இருப்பினும் இவர்களால் எத்தகைய தடைகளையும் தாண்டி வர முடியும். இவர்கள் வலிமை மிக்கவராக திகழ்வார்கள்.

மார்ச் 6 முதல் ஏப்ரல் 4 வரை
இவர்கள் மிதமான மன நிலையுடனும், பிறருடன் நெருக்கமாக பழகும் பண்பையும் கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களது நெருக்கமான நபர்களுடன் மட்டுமே மனம் திறந்து பேசுவார்கள்.

தங்களது சொந்த வாழ்க்கையிலும், வேலையிலும் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். ஆனால் இவர்களால் அனைத்து விடயத்திலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று சொல்ல முடியாது.

5 ஏப்ரல் – 4 மே வரை
இவர்கள் சமூகத்தில் அனைவருடனும் எளிதாக பழக கூடியவர்களாக இருப்பதால், இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்கள் பிரச்சனைகளை நேருக்கு நேராக நின்று போராட மாட்டார்கள். பிரச்சனைகளை கண்டு ஓடி விடுவார்கள்.

அதனால் இவர்களை அதிகப்படியான சிக்கலில் கொண்டு சென்று விடும். எனவே உண்மையானவர்கள் போல இருக்கிறார்களோ அவர்களை நம்பக் கூடாது.

5 மே – 4 ஜூன் வரை
இவர்கள் சாமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை எதிர் பார்ப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களது வாழ்க்கையில் கடினத் தன்மை மற்றும் மிருகத்தனம் சேர்ந்து இருக்கும்.

ஆனால் இவர்கள் உள் புறத்தில் மென்மையானவர்களாகவும், வெளிப்புறத்தில் கடினமானவர்களாகவும் இருப்பார்கள்.

5 ஜூன் – 4 ஜூலை வரை
இவர்கள் சுயமாக முடிவெடுக்கும் திறமை கொண்டவர்கள். ஆனால் சில சமயங்களில் கடுமையாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்கள்.

இவர்களுடைய நேர்மறையான எண்ணங்கள் சரியான ஒரு பாதையை நோக்கி செல்லாது. அதனால் மற்றவர்களிடம் பொருமையாக நடந்து கொள்வது நல்லது.

5 ஜூலை – 4 ஆகஸ்ட் வரை
இவர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களது வாழ்க்கைக்கான முடிவுகளை தைரியமாக எடுக்க கூடியவர்கள்.

மேலும் வாழ்க்கையில் வரும் பிரச்சனையை எதிர்த்து போராடும் தைரியம் இவர்களுக்கு இருக்கும். ஆனால் இவர்கள் எதிர்காலத்தில் இது தவறாக அமையும்,

5 ஆகஸ்ட் – 3 செப்டம்பர் வரை
இவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் ஒரு நிலையற்ற தன்மையை கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒரு முடிவை எடுத்து விட்டு, இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டோமே என்று வருத்தப்படுவார்கள்.

வேலை விடயத்தில் இவர்கள் நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் மிகச்சிறந்த் நண்பர்களை பெற்றிருப்பார்கள்.

4 செப்டம்பர் – 3 அக்டோபர் வரை
இவர்களை பற்றி புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று. இவர்கள் தங்களது சொந்த உள்ளுணர்வு மூலமாகவே எதையும் செய்வார்கள்.

பிறரை சார்ந்திருக்க மாட்டார்கள். இவர்கள் கொஞ்சம் தனிமையானவர்கள், அதனால் இவர்களால் புதிய சூழ்நிலைகளை சமாளிப்பது சற்று கடினமாகும்.

4 அக்டோபர் – 3 நவம்பர் வரை
இவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்களாக, அதாவது அனைவரும் பயணிக்க சாலை வழியை தேர்ந்தெடுத்தால், இவர்கள் மற்றவர்களின் யோசனையில் இருந்து மாறுபட்டு நடந்து கொள்வார்கள்.

ஆனால் இவர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தாங்களே தேர்ந்தெடுப்பவராக இருப்பார்கள்.

4 நவம்பர் – 3 டிசம்பர் வரை
இவர்கள் சில நேரங்களில் சோர்வாக இருப்பதோடு, வாழ்க்கையில் தேவையில்லாத விடயங்களின் மீது தங்களது கவனத்தை செலுத்துவார்கள்.

ஆனால் சிலர் ஏழ்மையில் மாட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள், படிப்படியாக இவர்கள் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே போவார்கள்.

4 டிசம்பர் – 3 ஜனவரி வரை
இவர்கள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்த எந்த நேரத்திலும் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அதனால் தங்களது லட்சியத்தை அடைய கடினமாக உழைப்பார்கள்.

ஆனால் இவர்கள் சற்று மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாவும் இருக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

இதையும் கொஞ்சம் படியுங்கள்!

2018 உங்கலுக்கு என்ன தரப்போகிறது என்று பார்ப்போம்!

மேஷம்
நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். உங்களுடைய ராசிக்கு சந்திரன் 2ம் இடத்தில் நிற்கும் நேரத்தில் இந்த 2018ம் ஆண்டு பிறப்பதால் வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கி யிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். வருடப் பிறப்பின்போது ராசிநாதன் செவ்வாய் 7ம் வீட்டில் நிற்பதால் கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களுடைய திறமைக்கு பரிசு, பாராட்டுகள் கிட்டும்.

விலை உயர்ந்த தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள். 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 8ம் வீட்டில் சென்று மறைவதால் சின்னச் சின்ன விஷயங்களையும் சற்று போராடி முடிக்க வேண்டி வரும். புத்தாண்டின் தொடக்கத்தில் சூரியன் பகைக் கோளான சனியுடன் இணைந்து நிற்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட கவலைகள் வந்து போகும். உங்களின் ஜீவனாதிபதியும்லாபாதிபதியுமான சனிபகவான் இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 9ம் இடத்திலேயே தொடர்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்தந்தையாருடன் மோதல்கள் வரும்.

அவருக்கு நெஞ்சு எரிச்சல், ரத்த அழுத்தம், வயிற்று உபாதைகளெல்லாம் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் சின்னச் சின்ன தடைகள் வந்து போகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப் பாருங்கள். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்ந்திருப்பதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். சிறு சிறு விபத்துகள் நிகழக்கூடும். பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. 10.3.2018 முதல் 02.05.2018 வரை உள்ள காலக்கட்டங்களில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருப்பதால் தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். 03.5.2018 முதல் 30.10.2018 வரை கேதுவுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மறைமுக அவமானங்களும் வந்து போகும். ஆனால், பதவி உயரும்.

உங்களை பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். 02.08.2018 முதல் 29.8.2018 வரை உள்ள காலக்கட்டத்திலே சுக்கிரன் 6வது வீட்டிலே சென்று மறைவதனால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், வாகன விபத்து, தங்க ஆபரணங்கள் தொலைந்து போகுதல் போன்ற நிகழ்வுகள் நிகழக்கூடும். கவனமாக இருப்பது நல்லது. இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே நிழல் கிரகங்களான ராகு 4ம் இடத்திலும், கேது 10லும் தொடர்வதால் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும் அல்லது வேறு ஊர், மாநிலம் மாற வேண்டிய சூழலும் ஏற்படும். இடப்பெயர்ச்சி உண்டு. தாயார் கோபத்தில் ஏதேனும் திட்டினாலும் அதையெல்லாம் உடனே மறந்து விடுவது நல்லது. அவருக்கு நீரிழிவு நோய், மூட்டு வலி, நரம்புச் சுளுக்கு வந்து போகும். புறநகர் பகுதியில் வீடோ, மனையோ வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. மற்றவர்கள் அதை உரிமைக் கொண்டாட வாய்ப்பிருக்கிறது. பழைய கடனை நினைத்து கவலைப்படுவீர்கள். சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டேயிருக்கும்.

வியாபாரிகளே! கடந்தாண்டில் ஏற்பட்ட நட்டங்களையெல்லாம் சரி செய்வீர்கள். மக்களின் ரசனையைப் புரிந்து கொண்டு புது வியூகம் அமைத்து லாபம் ஈட்டுவீர்கள். முக்கிய சாலைக்கு கடையை மாற்ற திட்டமிடுவீர்கள். சிலர் சொந்த இடம் வாங்கி கடையை மாற்றுவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி திருத்துவீர்கள். மாற்றுமொழிப் பேசுபவர்களும், பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உணவகம், தங்கும் விடுதி, கண்சல்டன்சி, சிமென்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். ராகு 4ல் நிற்பதால் கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பங்குதாரர்கள் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உத்யோகஸ்தர்களே! உத்யோக ஸ்தானாதிபதி சனி சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள். என்றாலும் கேது 10ல் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், மற்றொரு சாரர் எதிராகவும் செயல்படுவார்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வி மற்றும் காதல் விஷயத்தில் இருந்து வந்த குழப்பங்களிலிருந்து மீள்வீர்கள். இனி தெளிவான முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். உங்கள் தகுதிக் கேற்ப அதிக சம்பளத்துடன் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும். திருமணம் ஏற்பாடாகும். ஆரோக்கியமும் சீராகும்.

மாணவ-மாணவிகளே! வகுப்பாசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். படிப்பில் மட்டுமல்லாமல் கலைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். சிலருக்கு விளையாட்டில் பதக்கம் கிடைக்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெற்று விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் வலுவிழப்பார்கள். மாவட்ட அளவில் முக்கிய பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மக்களின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். பெரிய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். புகழ், கௌரவம் ஒருபடி உயரும். விவசாயிகளே! விளைச்சல் இரட்டிப்பாகும். அரசாங்க சலுகைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். காய்கறி, தானிய வகைகளால் லாபமடைவீர்கள். சிலர் புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். இந்த 2018ம் ஆண்டு எவ்வளவோ முயன்றும் முன்னுக்கு வராமல் முனகிக் கொண்டிருந்த உங்களை வெற்றி பெற வைப்பதுடன், எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

ரிஷபம்
பொன், பொருள் கொடுத்துப் பொய் சொல்லச் சொன்னாலும் புறங்கூறாத நீங்கள் நீதிக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். உங்களின் சப்தமாதிபதி செவ்வாய் பகவான் 6ம் வீட்டில் வலுவாக நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லாப் பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். புதன் உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களுடைய ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். இந்தாண்டு முழுக்க ராகு 3ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தைரியம் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். இந்தப் புத்தாண்டின் தொடக்கமே ராசிநாதன் சுக்கிரன் 8ல் நிற்பதுடன் சூரியன், சனியுடன் சேர்ந்திருப்பதால் வீண் அலைச்சல்கள், திடீர் பயணங்களெல்லாம் அதிகரிக்கும்.

01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனுடன் சனி சேர்வதால் இக்காலக்கட்டத்தில் தோல்வி மனப்பான்மை, வீண்பழி வந்து போகும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தரவும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். 10.3.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் பிதுர்வழி சொத்தில் சிக்கல்கள் வரலாம். தந்தையாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். செலவுகள் அதிகரிக்கும்.

30.8.2018 முதல் 28.12.2018 வரைக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6வது வீட்டில் சென்று மறைவதனால் சிறு சிறு விபத்துகள், வாகனம் பழுதாகுதல், வீடு பராமரிப்பு செலவுகள், தொண்டைப் புகைச்சல் மற்றும் காய்ச்சல் சளி தொந்தரவு வந்து நீங்கும். இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே சனி 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகத் தொடர்வதால் பொய்யான விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள். ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் அஷ்டமலாபாதிபதியான குரு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முடிப்பதா என்ற டென்ஷன் இருந்து கொண்டேயிருக்கும்.

ஹார்மோன் பிரச்னை, தைராய்டு, யூரினரி இன்ஃபெக்ஷன், தோலில் நமைச்சல் வந்து போகும். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 7ம் வீட்டிலும் அமர்ந்து ராசியைப் பார்க்கயிருப்பதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களால் நிம்மதி குறையும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலைப் பார்க்க வேண்டி வரும். யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமில்லாத தொழிலில் பணத்தை கொட்டி நட்டப்படாதீர்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புரோக்கரேஜ், மூலிகை, பெட்ரோகெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். எதிர்பார்த்த ஆடர் தாமதமாக வரும்.

உத்யோகஸ்தர்களே! உத்யோக ஸ்தானாதிபதியான சனி 8ல் சென்று மறைந்திருப்பதால் நிலையற்ற போக்கு நிலவும். உங்களை விட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களிடமெல்லாம் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ, புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை. சக ஊழியர்களைப் பற்றிய குறைப்பாடுகளை மூத்த அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல்களையும், ஈகோ பிரச்னைகளையும் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குத் தொடர வாய்ப்பிருக்கிறது. நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, சலுகைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும்.

கன்னிப் பெண்களே! இரவில் அதிக நேரம் கண் விழித்திருக்க வேண்டாம். ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ்அப்பில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு பாராட்ட வேண்டாம். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். தேமல், கண்ணில் கருவளையம், தூக்கமின்மை வந்துச் செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் திருமணம் முடியும்.

மாணவ-மாணவிகளே! மந்தம், மறதி அதிகரிக்கும். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். கீ ஆன்சரை சார்ட்டில் எழுதி வைத்து அவ்வப்போது நினைவுக் கூர்வது நல்லது. சிலர் பெற்றோரை விட்டு பிரிந்து விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதிகம் செலவு செய்து பள்ளி மாற வேண்டிய கட்டாயத்திற்கு சிலருக்கு ஏற்படக்கூடும். அரசியல்வாதிகளே! பொதுக் கூட்டங்களில் ஆவேசமாக பேச வேண்டாம். யதார்த்தமாக இருப்பது நல்லது. கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்துங்கள். கிசுகிசுத் தொல்லைகள் வரும். மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விவசாயிகளே! பூச்சித்தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் பாதிக்கும். செயற்கை உரங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். விலை குறைவாக இருக்கிறது என்று நினைத்து தரமற்ற விதைகளை வாங்கி விதைக்க வேண்டாம். அக்கம் பக்கத்து நிலக்காரர்களை அனுசரித்துப்போங்கள். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பல சோதனைகளை தந்தாலும், எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய அவசியத்தையும், தன் கையே தனக்குதவி என்பதையும் அறிவுறுத்துவதாக அமையும்.

மிதுனம்
விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்களே! பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! மனித நேயம் உள்ளவர்களே! பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகும் நீங்கள், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட மாட்டீர்கள். சுக்கிரன் உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 2018ம் வருடம் பிறப்பதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். இந்தப் புத்தாண்டு உங்களுடைய ராசிக்கு 12ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் சப்தமஜுவனாதிபதியுமான குருபகவான் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மாறுபட்ட சிந்தனையால் செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் சென்று மறைந்து சகட குருவாக அமர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு குடும்பத்தினரை சந்தேகப்பட வேண்டாம். கணவன்மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போங்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. வருடம் பிறக்கும் போது ராசிநாதன் புதன் 6ம் இடத்தில் மறைந்திருப்பதால் நரம்புச் சுளுக்கு, கழுத்து வலி, காய்ச்சல், சளித் தொந்தரவு வந்து போகும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பண உதவிக் கேட்டு தொந்தரவு தருவார்கள். செவ்வாய் 5ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே சனி உங்களுடைய ராசிக்கு 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக நீடிப்பதால் தன்னம்பிக்கை குறையும். ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் மோதல்கள் வரக்கூடும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவது நல்லது. மனைவி அடிக்கடி கோபப்படுவார். சில நேரங்களில் உங்களின் குற்றம், குறைகளை பட்டியலிட்டுக் கொண்டிருப்பார் அதையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொள்ளாதீர்கள். மனைவிக்கு ஃபைப்ராய்டு, மஞ்சள் காமாலை, முதுகுத் தண்டில் வலி வந்து போகும். அடுத்தடுத்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். சிலர் உங்களை பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாத போது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். மற்றவர்களைக் குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை நீங்களே பரிசோதித்துப் பார்த்து சரிப்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.

01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியன் சனியுடன் சேர்ந்திருப்பதால் அக்காலக்கட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். இளைய சகோதரம் வகையில் அலைச்சல்கள் அதிகரிக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு தலைச்சுற்றல், மூட்டு வலி, முன்கோபம் வேலைச்சுமை வந்து போகும். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சனை வந்து போகும். இரவில் தொலைதுதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. 2ல் ராகுவும், 8ல் கேதுவும் இந்தாண்டு முழுக்க நீடிப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை கண்டுபிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும்.

திடீர் திடீரென்று ஒருவித மனோபயம் வந்து போகும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். சிலர் உங்கள் வாயை கிளறி வம்புக்கிழுப்பார்கள். பேசும் போது கவனமாக இருங்கள். யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். பார்வைக் கோளாறு வரக்கூடும். சிலர் மூக்குக் கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. சோப்பு, ஷாம்பூ மாற்றாதீர்கள். அலர்ஜி வரக்கூடும். அக்கம் பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். இடமாற்றம் உண்டு. வாகனத்தை எடுக்கும் முன் எரிப்பொருள், ப்ரேக் ஒயர் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு செல்வது நல்லது. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது.

வியாபாரிகளே! ஏற்ற இறக்கங்கள் இருக்கும். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். சந்தை நிலவரங்களை உன்னிப்பாக கவனியுங்கள். பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம். இருப்பதை வைத்து லாபம் ஈட்டப்பாருங்கள். புகழ் பெற்றவர்கள் உங்களுக்கு வாடிக்கையாளர்களாக வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். அயல்நாடு, வெளிமாநிலத் தொடர்புடனும் புது வியாபாரம் செய்யத் தொடங்குவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். சக ஊழியர்களுக்கும் சலுகைகள் பெற்றுத் தருவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வையெல்லாம் எதிர்பார்க்கலாம். கன்னிப்பெண்களே! நீங்கள் நினைத்தப்படி எல்லாம் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருசிலர் உங்களுடைய காதலைப் புரிந்து கொள்வார்கள். கல்யாணம் கூடி வரும். லேப்டாப், மொபைல் போன் புதிதாக வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். உங்களுக்கிருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும்.

மாணவ-மாணவிகளே! படிப்பிலே முன்னேறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். கவிதை, கட்டுரைகள் எழுதி பரிசுப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால், உங்களால் பயனடைந்தவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுதல் போன்றவை நிகழும். ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

கலைத்துறையினரே! ஒருபக்கம் உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம்தான் இருக்கும். அதற்காக அஞ்ச வேண்டாம். புதிய வாய்ப்புகளும் கூடி வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். விவசாயிகளே! மாற்றுப் பயிர் மூலமாக கூடுதல் ஆதாயமடைவீர்கள். தண்ணீர் பிரச்னையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது போல தான் இப்போதைய நிலை இருக்கும். இந்த 2018ம் ஆண்டு சின்னச் சின்ன எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளில் தாமதத்தையும் தந்தாலும் மாற்றுப் பாதையில் சென்று வெற்றி பெற வைக்கும்.

கடகம்

ஆறாவது அறிவுக்கு அடிக்கடி வேலை தரும் நீங்கள், சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். இந்தாண்டு பிறக்கும் போது சூரியன் 6ம் இடத்திலும், புதன் 5ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இந்த 2018ம் வருடம் முழுக்கவே சனிபகவான் உங்களுடைய ராசிக்கு 6ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றிப் பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். திடீர் பணவரவு, யோகமும் உண்டாகும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் சஷ்டமபாக்யாதிபதியான குருபகவான் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.

தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாயாருக்கு அசதி, சோர்வு, ரத்த அழுத்தம் வந்துச் செல்லும். வீடு பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். வீடு வாங்கும் முன் வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து க்ளீயரன்ஸ் சர்ட்டிபிகேட் வாங்கியப் பின் வீடு வாங்குவது நல்லது. இல்லையென்றால் வில்லங்கமான வீடுடோ அல்லது இடமோ வாங்கிவிட்டு பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. பொதுவாக எந்த சொத்து வாங்கினாலும் மனைவி பெயரில் வாங்குவது நல்லது. ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிற்குள் நுழைவதால் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். தாயாருக்கு இருந்த நோய் வெகுவாக குறையும். அவருடனான மோதல்களும் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள்.

ஐ.வி.எப் போல அதிக செலவுள்ள சிகிச்சைக்குப் பின்பும் அம்மா என்று சொல்ல பிள்ளையில்லை என்று நீங்கள் அழாத நாளில்லை இனி அழகிய வாரிசு உருவாகும். வயசு ஏறிக் கொண்டே போகிறதே! ஒரு வரன் கூட அமையவில்லையே என்று வளர்ந்து நிற்கும் உங்கள் பெண்ணை பார்த்து நீங்கள் வருத்தப்படாத நாளே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். ஊரே மெச்சும் படி திருமணத்தை முடிப்பீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அவருக்கிருந்து வந்த கூடாப்பழக்க வழக்கங்கள் விலகும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வீண்பழியிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களுடனான மனக்கசப்பு நீங்கும். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் 6ல் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். பணபலம் கூடும்.

10.03.2018 முதல் 02.05.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாயுடன் சனி சேர்வதால் மறைமுக எதிரிகளை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்வதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். முன்கோபம் அதிகரிக்கும். பிள்ளைகளால் அலைச்சல்கள் வந்து போகும். 01.01.2018 முதல் 13.1.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாம். மனைவிவழி உறவினருடன் மனக்கசப்பு வரும். வாகன விபத்து வரக்கூடும். இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும், 7ம் வீட்டிலேயே கேதுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்து செல்லும். இரும்பு, நார், சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மோதல்கள் வந்து போகும். மனைவி வழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீகள். நீங்கள் யாரையும் மதிக்கவில்லை என்றெல்லாம் சிலர் குறைக் கூறுவார்கள். ஏமாற்றப்படபடுவோமோ என்று கலங்குவீர்கள். காலத்தை வீணடித்துவிட்டதாகவும் நினைப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது.

வியாபாரத்தில் நமக்குப் பின்னால் வந்து முதல் போட்டு ஏகப்பட்ட லாபம் எதிர்கடையில் உள்ளவர்கள் பார்த்து விட்டார்கள். பல வருடம் இங்கேயே இருந்தும் லாபத்தை பார்க்க முடியவில்லையேஎன்று நீங்கள் புலம்பி தவிர்த்தீர்களே! இனி கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாட்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளை சரியாக கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டு தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். பதிப்பகம், கன்ஸ்ட்க்சன், மூலிகை, ஸ்க்ராப் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். என்றாலும் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.

கன்னிப்பெண்களே! போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றிப் பெறுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். வெளி மாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். கூடா நண்பர்களை தவிர்த்து நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவ-மாணவிகளே! உங்களுடைய பொது அறிவுத் திறன் வளரும். வகுப்பறையில் அரட்டை பேச்சை தவிர்த்துவிடுங்கள். தேர்வறையில் விடையை நினைவுக்கூறும் போது திணறுவீர்கள். அதனால் விடைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது நல்லது. கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்றுக் கொள்வார்கள். என்றாலும் உட்கட்சி பூசல் வெடிக்கும். சகாக்களிடம் பெருமை பேச வேண்டாம்.

விவசாயிகளே! விளைச்சல் ரெட்டிப்பாகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வேர்க்கடலை, நெல், சூரிய காந்தி மற்றும் உளுந்து வகைகளால் லாபமடைவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனை விரியும். சக கலைஞர்களை மதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். இந்த 2018ம் ஆண்டு உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை காட்டிக் கொடுப்பதுடன், நீண்ட கால கனவுகளையெல்லாம் நனவாக்குவதாகவும் அமையும்.

சிம்மம்

தாய் மண்ணின் மீதும், மொழியின் மீதும் தீராத தாகம் கொண்ட நீங்கள், கடல் தாண்டி போனாலும் கலாச்சாரத்தை மீற மாட்டீர்கள். வஞ்சப் புகழ்ச்சியால் சுற்றியிருப்பவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்கு குரல் கொடுப்பவர்கள். உங்களது 10வது ராசியில் இந்த 2018ம் வருடம் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். இதுநாள் வரை நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் பகவான் 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2018ம் ஆண்டு பிறப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்களது ரசனை மாறும். சாதூயர்மாகப் பேசி சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது உங்களுடைய ராசிநாதன் சூரியன் பகைக்கோளான சனியுடன் இணைந்து நிற்பதால் முன்கோபம் அதிகமாகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் அஷ்டமாதிபதியுமான குருபகவான் 3ம் வீட்டில் மறைந்து காணப்படுவதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். சில நேரங்களில் எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை உண்டாகும். 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.

என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துச் செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். அரசிடமிருந்து முறையான கட்டிட வரைப்பட அனுமதி பெறாமல் கட்ட வேண்டாம். வருடம் முடியும் வரை சஷ்டமசப்தமாதிபதியான சனி 5ம் வீட்டிலேயே தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். எதையுமே யோசிக்க முடியாமல் ஆழ்மனதில் ஒருவிதமான குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். குடும்ப சூழ்நிலையை அவர்களிடம் அன்பாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள்.

மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். அவரின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். 01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனுடன், சனி சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் செலவுகள் அதகிரிக்கும். வேலைச்சுமை அதிகரித்து சோர்வடையச் செய்யும். தூக்கம் குறையும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை உள்ள காலக்கட்டங்களில் செவ்வாயும், சனியும் சேர்வதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். சாலையை கடக்கும் போதும், வாகனத்தை இயக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம்.

03.05.2018 முதல் 30.10.2018 வரை உள்ள காலக்கட்டங்களில் செவ்வாயும், கேதுவும் சேர்வதால் வி.ஐ.பி களுக்கு நெருக்கமாவீர்கள். ஏமாற்றுக் காரர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. 14.1.2018 முதல் 07.2.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதனால் சிறுசிறு விபத்துகள் வந்துப் போகும். வாகனத்தை வேகமாக இயக்க வேண்டாம். அக்கம்பக்கம் வீட்டாருடன் கவனமாக பழகுங்கள். திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் மோதல்கள் வரும். இந்தாண்டு முழுக்கவே உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள் மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

வியாபாரிகளே! போட்டிகளை சமாளிப்பீர்கள். தொலைக்காட்சி, வானொளி, வாட்ஸ்அப் விளம்பரங்களை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்தி லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பொருட்களை கொள்முதல் செய்வீர்கள். சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களை வேலையாட்களாக நியமிப்பீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். சிலர் கடையை நவீனமாக்குவீர்கள். புரோக்கரேஜ், சினிமா, சிமெண்ட், பெட்ரோகெமிக்கல், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களே! சூட்சுமங்களை உணருவீர்கள். கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி வரும். பெற்றோரின் கனவுகளை நனவாக்க முயலுங்கள். கல்யாணம் சற்று தாமதமாகி முடியும். தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாற வேண்டாம்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விரும்பியப் பாடப்பிரிவில் கூடுதல் செலவு செய்தும், சிலரின் சிபாரிசின் பேரிலும் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினரே! ஒருபுறம் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள். புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.

அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். போட்டி, பொறாமையால் தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கவனமாக இருங்கள். விவசாயிகளே! சென்றாண்டில் ஏற்பட்ட இழப்பை இப்போது சரி கட்டுவீர்கள். மரப்பயிர்களால் காசு, பணம் பார்ப்பீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். இந்த 2018ம் வருடம் உங்கள் செயல் வேகத்தை துரிதப்படுத்துவதுடன், புதிய முயற்சிகளில் வெற்றியையும் தருவதாக அமையும்.

கன்னி
மனதில் பட்டத்தை பளிச்சென்று பேசி உண்மைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நீங்கள், சில சமயங்களில் பலருக்கு எதிரியாகவே தெரிவீர்கள். எல்லோரையும் எடுத்த எடுப்பிலேயே நம்பும் நீங்கள், காலம் கடந்து`தான் சிலரின் கல் மனதை புரிந்து கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் இந்த 2018ம் ஆண்டு பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் சுகசப்தமாதிபதியான குருபகவான் 2ம் வீட்டில் நிற்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அனுபவப் பூர்வமான முடிவுகளால் எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.

ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் சென்று மறைவதால் எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல் வரும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய தனித்தன்மையை பின்பற்றுவது நல்லது. இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டிலேயே சனி அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் உங்களின் அடிப்படை நடத்தை கோலங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். தாயாருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனக்கசப்பு வந்து நீங்கும்.

01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனுடன், சனி சேர்ந்திருப்பதால் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது. 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால் தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுங்கள். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்வதால் மன இறுக்கம் வந்து நீங்கும்.

மகனின் படிப்பு, உத்யோகத்துக்காக சிலரது சிபாரிசை நாடுவீர்கள். கார்ப்பிணிகள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்க வேண்டாம். படிகளில் ஏறும்போது கவனம் தேவை. 8.2.2018 முதல் 2.3.2018 வரை உள்ள காலக்கட்டத்தில் சுக்கிரன் 6ல் மறைவதனால் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினால் அதை எல்லோரும் தவறாகப் புரிந்து கொள்வார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ் பழுதாகும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். அலைப் பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். இந்தப் புத்தாண்டு முழுக்கவே ராகுபகவான் லாப வீட்டிற்குள்ளேயே அமர்ந்திருப்பதால் முன்பு சவாலாக தெரிந்த சில விஷயங்கள் இப்போது சாதாரணமாக முடிவடையும். கேது 5ல் தொடர்வதால் குழப்பம் அதிகரிக்கும். சில நேரங்களில் மனஇறுக்கம் உண்டாகும்.

வியாபாரிகளே! போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் சின்ன சின்ன நட்டங்கள் இருக்கும். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே, நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். உணவு, மருந்து, கட்டுமானப் பொருட்கள், நெல் மண்டி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். வேலையாட்களும் உங்களுடைய கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்து கொள்ளாமல் பொறுப்பற்று நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்யோகஸ்தர்களே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்களால் சின்ன சின்ன நெருக்கடிகளை சமாளிக்க வேண்டி வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

கன்னிப்பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வேலையும் அமையும். இந்தாண்டு முழுக்க சனியின் போக்கு சாதகமாக இல்லாததால் காதலில் ஏமாற்றமும், உயர்கல்வியில் தேக்கமும், மந்தமும் ஏற்படும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். பெற்றோருடன் மோதிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். தோலில் நமைச்சல், தேமல், மாதவிடாய் கோளாறு வந்து நீங்கும்.

மாணவ-மாணவிகளே! விளையாட்டுத்தனத்தை குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றி பெற கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி வரும். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். மதிப்பெண் உயரும். விரும்பிய கோர்ஸில் சேர கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும். அரசியல்வாதிகளே! மேலிடத்தைப் பற்றி சகாக்களிடம் குறை கூறிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் உங்களைப் பற்றி வீண் வதந்திகளை பரப்பிவிடக்கூடும். கட்சிக் கூட்டங்களுக்கு தவறாமல் கலந்து கொள்ளப்பாருங்கள்.

கலைத்துறையினரே! வீண் வதந்திகள் விலகும். கனவுகள் நனவாகும். உங்களின் படைப்புகள் பாராட்டப்படும். மூத்த கலைஞர்களை விமர்சனம் செய்ய வேண்டாம். விவசாயிகளே! பயிர்களை நவீனரக உரமிட்டு பாதுகாப்பீர்கள். எண்ணெய் வித்துகள், துவரை, உளுந்து, பயறு வகைகளால் ஆதாயமடைவீர்கள். நிலத்தகராறு பிரச்னைகள் வரும். ஆகமொத்தம் இந்த புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவுகளையும், கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளினாலும், தன்னம்பிக்கையால் சாதிக்க வைப்பதாக அமையும்.

துலாம்
யதார்த்தமான முடிவுகளை எடுத்து மற்றவர்களை வியக்க வைக்கும் நீங்கள், கேள்வி ஞானம் அதிகமுள்ளவர்கள். எந்த நிகழ்வுகளையும் தொகுத்து கோர்வையாக வெளியிடுவதில் வல்லவர்கள். அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்க்க விரும்பாத நீங்கள், எதற்காகவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். 3ம் வீட்டில் உங்களின் யோகாதிபதியான சனிபகவான் வலுவடைந்து நிற்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். உங்களுடைய ராசிக்கு 3ம் சூரியனும், சுக்கிரனும் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் அதிகரிக்கும். இந்த 2018ம் ஆண்டு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராட்டத்திற்கு பின்பு முடியும். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்துக் கொண்டேயிருக்கும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் திருதியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குரு உங்களுடைய ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி, வயிற்று உபாதைகளெல்லாம் வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. பழைய பிரச்னையில் ஒன்று முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சுவிடும் நேரத்தில் அடுத்த சிக்கல்கள் ஒன்று புதிதாக தலைத்தூக்கும். தூக்கம் குறையும். சிலர் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். வீண் பழியும் வந்து நீங்கும். கணவன்மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள்.

ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 2ம் வீட்டில் சென்று அமர்வதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.

01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்வதால் பணவரவு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன், சனியும் சேர்வதால் மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமுண்டு. என்றாலும் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும். பூர்வீகச் சொத்துக்கான வரியை செலுத்தி சரியாக பராமரியுங்கள். நீண்ட நாளாக புதுபிக்கப்படாமலிருந்த குலதெய்வ கோயிலை சொந்த செலவில் புதுப்பிப்பதுடன், உங்களின் நேர்த்திக்கடனையும் முடிப்பீர்கள். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன், கேது சேர்வதால் இக்காலக்கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்கவும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அவர்களை பிரிய நேரிடலாம்.

யாருக்காகவும் ஜாமீன் கேரன்டர் கையெழுத்திட வேண்டாம். 3.3.2018 முதல் 28.3.2018 வரை சுக்ரகின் 6ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். மின் சாதனங்கள், மின்னணு சாதனங்களையெல்லாம் கவனக்குறைவால் தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தாண்டு முழுக்க ராகுபகவான் 10ம் வீட்டிலும், கேது ராசிக்கு 4ம் இடத்திலும் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம், முடிவுகளெடுப்பதில் தடுமாற்றம் வந்து செல்லும். அடுத்தடுத்து வேலைச்சுமை இருக்கும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். தாயார் உரிமையில் ஏதேனும் திட்டினால் அதையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். சில நாட்கள் தூக்கமில்லாமல் போகும். முன்பின் தெரியாதவர்கள் யாரேனும் உங்களுக்கு உதவுவதாக முன் வந்தால் உடனே நம்பி ஏமாற வேண்டாம்.

வியாபாரிகளே! லாபம் உண்டு. சில்லரை வியாபாரத்திலிருந்து சிலர் மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். 3ம் வீட்டில் சனி நிற்பதால் தைரியமாக புது முதலீடுகள் செய்வீர்கள். பண உதவிகளும் கிடைக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி கடன் தர வேண்டாம். ஸ்டேஷனரி, கல்விக் கூடங்கள், போடிங், லாட்ஜிங், கன்ஸ்ட்ரக்சன், டிராவல்ஸ் ஏஜென்சி வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பொறுப்பு, பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும் ராகு 10ல் தொடர்வதால் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள்.

கன்னிப்பெண்களே! செப்டம்பர் மாதம் வரை ஜென்ம குரு நீடிப்பதால் சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். பெற்றோரின் ஆலோசனையை புறக்கணிக்காதீர்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சனி சாதகமாக இருப்பதால் கல்யாணம் கூடி வரும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். சக மாணவர்களும் தேர்வு சம்பந்தமாக உங்களை கலந்தாலோசிப்பார்கள். வகுப்பாசிரியரின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிட்டும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.

அரசியல்வாதிகளே! பழைய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகாக்கள் மத்தியில் மரியாதை கூடும். மாவட்டப் பொறுப்புகளை கூடுதலாக நீங்கள் பார்க்க வேண்டி வரும். விவசாயிகளே! மாற்றுப் பயிர் மூலமாக கூடுதல் ஆதாயமடைவீர்கள். கால்நடை வளர்ப்பு மூலமாகவும் வருமானம் உயரும். வீட்டில் நல்லது நடக்கும். ஆக மொத்தம் இந்த 2018ம் ஆண்டு தொடக்கத்தில் ஜென்ம குரு சின்ன சின்ன சுகவீனங்களை தந்து பலவீனமாக்கினாலும், சனிபகவான் செல்வாக்கு, கௌரவத்தை அதிகம் தந்து சுறுசுறுப்பாக்குவார்.

விருச்சிகம்
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், புரட்சிகரமான தொலை நோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்கள். தாயா தாரமா என்ற தடுமாற்றம் உங்களுக்கு அடிக்கடி வரும். சடங்கு, சம்பிரதாயங்களை விட சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பாதியிலேயே நின்ற பல வேலைகள் இனி முழுமையாக முடியும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். 2018ம் ஆண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். அவர் வழி உறவுகளால் ஆதரவு உண்டு. சிலர் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள்.

கல்யாணம், சீமந்தம், காது குத்தி என வீடு களைக்கட்டும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். ஆனால் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். வருடம் முடியும் சனி 2ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதிக் கட்டமான பாதச் சனி தொடர்வதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வருடப் பிறப்பு முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்ந்திருப்பதால் உடல் உஷ்ணம், ரத்த அழுத்தம், காரியத் தடங்களெல்லாம் வந்து போகும். முன்கோபத்தால் முக்கியஸ்தர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் சங்கடங்கள், பணப்பற்றாக்குறை, சொத்து சிக்கல்கள், பழைய கடன் பற்றிய கவலைகள் வந்து செல்லும்.

கால்சியம் சத்து குறைய வாய்ப்பிருக்கிறது. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். 03.05.2018 முதல் 30.10.2018 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதரம் வகையில் ஆதரவு பெருகும் அவ்வப்போது களைப்படைவீர்கள். 29.03.2018 முதல் 21.04.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதனால் அலைச்சல், செலவினங்கள், கணவன்மனைவிக்குள் சந்தேகத்தால் சின்னச் சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். சிறுசிறு அறுவை சகிச்சைகளும் வந்து போக வாய்ப்பிருக்கிறது. இந்த 2018ம் வருடம் முழுக்க ராகு 9ம் வீட்டில் நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். தந்தையாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். அவருடன் கசப்புணர்வுகளும் வந்து செல்லும். 02.05.2018 முதல் 30.10.2018 வரை ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் இணைவதால் தன்னம்பிக்கை குறையும். தாழ்வான எண்ணங்கள் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் தனபூர்வ புண்யாதிபதியான குருபகவான் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் மாதம் தவறாமல் அசலை செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டேப் போகிறதே என்று அச்சப்படுவீர்கள். வாகனத்திற்கான லைசன்ஸ், இன்சூரன்சை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசை போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி தடைபட்டு முழுமையடையும். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்குள் அமர்வதால் திடீர் பயணங்களால் ஏற்பட்ட வீண் அலைச்சல்கள், அலைக்கழிப்புகள் குறையும்.

பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஜென்ம குருவாக வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையை தவிர்ப்பது நல்லது. ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். சில நேரங்களில் சூழ்நிலை கைதியாக சிக்கிக் கொள்வீர்கள். தர்மசங்கடமான சூழல்களும் அவ்வப்போது வரும்.

வியாபாரிகளே! இந்தாண்டு பற்று வரவு சுமாராக இருக்கும். பழைய சரக்குகளை போராடி விற்க வேண்டி வரும். வேலையாட்களுக்கு எவ்வளவு உதவினாலும் நன்றி மறந்த நிலையில் நடந்து கொள்வார்கள். அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். புரோக்கரேஜ், ஸ்க்ராப், சிமென்ட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும். உங்களின் விடா முயற்சியையும், கடின உழைப்பையும் நேர் மூத்த அதிகாரி புரிந்து கொள்ள மாட்டார். சக ஊழியர்களுடன் சலசலப்புகள் வரக்கூடும். நியாயத்தை எடுத்துச் சொல்லப் போய் உங்கள் பெயர் கெட வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவல் அறிந்து உங்கள் கருத்துக்களை வெளியிடுவது நல்லது. அதிக சம்பளத்துடன், சலுகைகளுடன் புது வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து ஏற்பது நல்லது.

கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். அலைச்சல், டென்ஷன் இருக்கும். அவ்வப்போது கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! ஏழரைச் சனி நடைபெறுவதால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபப்படாதீர்கள். கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். முதல் வரிசைக்கு முன்னேறுங்கள். வகுப்பாசிரியர் கூறும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. ஒருமுறை படித்தால் மட்டும் போதாது, அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்த்து நினைவில் நிறுத்துவது நல்லது.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகள் ஆங்காங்கே இருக்கும். தொகுதி மக்களிடையே சலசலப்புகளும் வரும். கோபப்படாமல் அமைதியாக மக்களை எதிர்கொள்வது நல்லது. கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை விட வயது குறைந்த கலைஞர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள்.

விவசாயிகளே! எலித் தொல்லையால் மகசூல் குறையும். தவறான உரங்களைப் பயன்படுத்தாதீர்கள். டிராக்டர், கலப்பை, பம்பு செட் அடிக்கடி பழுதாகும். இந்த 2018ம் ஆண்டு வேலைச்சுமையையும், மன அமைதியின்மையும் தந்தாலும் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்த்துவதாக அமையும்.

தனுசு
தன் சொந்த உழைப்பால் உயர விரும்பும் நீங்கள், பாதை மாறி சென்று பணம் சம்பாதிக்க தயங்குவீர்கள். பாவப்புண்யம் அடிக்கடி பார்ப்பீர்கள். அதிகம் ஆசைபடாமல் அடுத்தவர் சொத்து மீதும் கண் வைக்காமல், உதிக்கும் போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்கள் நீங்கள் தான். புத்தாண்டின் தொடக்கத்தில் உங்களுடைய ராசிக்குள்ளேயே சூரியனும், சுக்கிரனும் நிற்பதால் செயலில் வேகம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் லாப வீட்டில் நிற்கும் நேரத்தில் இந்த 2018ம் வருடம் பிறப்பதால் உங்களை தலைநிமிர வைக்கும். வருமானம் உயரும். இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல், செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்துச் செல்லும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வரக்கூடும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 12ம் வீட்டில் சென்று மறைவதால் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்துச் செல்லும்.

குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். வருடப் பிறப்பு முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்ந்திருப்பதால் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். அவருடன் சின்ன சின்ன மோதல்கள் வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கை தவிர்க்கப்பாருங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் சனியுடன் சேர்ந்து பலவீனமடைவதால் மனதில் இனந்தெரியாத குழப்பம் வந்துப் போகும். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். பூர்வீக சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். 02.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் சில நேரங்களில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல ஆழ்மனதில் ஒரு வெறுமை, வெறுப்பு வந்துச் செல்லும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரை நன்கு விசாரித்து முடிப்பது நல்லது. 22.04.2018 முதல் 15.5.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் பேச்சால் பிரச்னைகளும் வரக்கூடும். இந்தப் புத்தாண்டு முழுக்கவே ராகு 8ம் வீட்டிலும், கேது 2ம் இடத்திலும் அமர்ந்திருப்பதால் வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்தப்பாருங்கள். எதையும் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். பல் வலி, காது வலி, கண் எரிச்சல் வந்துப் போகும். முன்கோபத்துடன் பேசி சொற் குற்றம், பொருள் குற்றத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலமாக சச்சரவுகளில் சிக்குவீர்கள். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம். வெளிநாடு சென்று வருவீர்கள். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

வியாபாரிகளே! கணிசமாக லாபம் உயரும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். உங்களுக்கு எதிராக புதிது புதிதாக போட்டியாளர்கள் வருவார்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலமாக வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜென்மச் சனி தொடர்வதால் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு தக்க சமயத்தில் கிடைக்காது அந்த நேரத்தில் உங்கள் மீது கேஸ், கொரிஸ் போட்டு அனுப்புவார்கள். சிலருக்கு மெமோ கொடுப்பார்கள். இத்தனை வருட காலமாக உழைத்து, எல்லாம் கூடி, கனிஞ்சி வரும் நேரத்தில் இப்படி ஆகிறதே என்று ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இழந்த சலுகைகளை போராடி பெறுவீர்கள்.

கன்னிப்பெண்களே! உங்களின் ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கல்யாண பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். ஜென்மச் சனியால் அசதி, சோர்வு, பசியின்மை, சிறுநீர் பாதையில் அழற்சி எல்லாம் வரக்கூடும்.

மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். அன்றன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். அவ்வப்போது தூக்கம், மந்தம், மறதி வந்து நீங்கும். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி பெற போராடியும், அதிக செலவு செய்தும் சேர வேண்டி வரும். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். வீண்வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். சம்பள விஷயத்தில் அதிக கண்டிப்பு வேண்டாம்.

அரசியல்வாதிகளே! உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள். விவசாயிகளே! வரப்புத் தகராறு, வாய்க்கால் சண்டை என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். நவீன ரக உரங்களைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்தப்பாருங்கள். இந்தப் புத்தாண்டு புதிய படிப்பினைகளை தருவதாகவும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் கொஞ்சம் நெளிவு, சுளிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும்.

மகரம்
அமைதியையும், அன்பையும் விரும்பும் நீங்கள், எல்லோரும் எல்லாம் பெற வேண்டுமென்று நினைப்பீர்கள். கவரிமானைப் போல கௌரவம் பார்க்கும் உங்களை பணத்தை காட்டி விலைக்கு வாங்க முடியாது. இந்த 2018ம் வருடம் சந்திரன் 5ம் வீட்டில் நிற்கும் போது பிறப்பதால் அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள். இந்தாண்டு முழுக்க ராசிக்குள் கேதுவும், 7ல் ராகுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித சலிப்பு, முன்கோபம், தலைச்சுற்றல், ஒற்றை தலை வலி, கை, கால் மரத்துப் போகுதல் வந்துச் செல்லும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் விரயாதிபதியும்திருதியாதிபதியுமான குருபகவான் 10ம் வீட்டில் நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்து வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே போகும். இடைவிடாமல் உழைத்து கையில் எதுவும் தங்கவில்லையே என்ற ஏக்கம் வந்துப் போகும்.

முன்கோபம், டென்ஷனால் முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். மற்றவர்களை குறைக் கூறுவதில் எந்த பலனும் இல்லை. சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. சின்ன சின்ன ஏமாற்றங்கள், எதிலும் ஈடுபாடற்ற நிலை வரும். அசிங்கப்பட்டுவிடுவோமோ, அவமானங்களை சந்திக்க நேரிடுமோ, யாரேனும் தன்னைப் பற்றி தவறாக சொல்லி விடுவார்களோ என்றெல்லாம் அடிக்கடி யோசித்துக் கொண்டேயிருப்பீர்கள். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். வாகனம் அடிக்கடி பழுதாகும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். அவ்வப்போது ஆழ்மனதில் ஒருவித பயம் வந்து நீங்கும். மற்றவர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயம் பேசப் போய் பெயர் கெடும். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 11ம் வீட்டில் சென்று அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.

பிரச்சனைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். தீர்வு தேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதனும்தனாதிபதியுமான சனிபகவான் 12ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதால் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தன்னம்பிக்கை குறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மற்றவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்காமல் நீங்களும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து சில முடிவுகள் எடுக்கப்பாருங்கள். பழைய கடனைப் பிரச்னையால் சேர்த்து வைத்த கௌரவத்தை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டேயிருக்கும். 1.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனும், சனியும் சேர்வதால் இக்காலக்கட்டத்தில் அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். கடன் பிரச்னை அதிகரிக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து நிற்பதால் உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்துச் செல்லும். தவறானவர்களை எல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள்.02.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் இணைவதால் உணர்ச்சிவசப்பட்டு யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்கள் செய்த துரோகங்களையெல்லாம் நினைத்து கவலைப்பட்டு நிம்மதியை இழந்து விடாதீர்கள்.

அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாறாதீர்கள். விளம்பரங்களை பார்த்து சோப்பு, ஷாம்பு, வாசனை திரவியங்களையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். அலர்ஜி வரக்கூடும். 16.05.2018 முதல் 10.06.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அடிக்கடி பழுதாகும்.

வியாபாரிகளே! மற்றவர்களின் பேச்சை கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும்.

உத்யோகஸ்தர்களே! நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் தந்திரத்தை முறியடிப்பீர்கள். இழந்த சலுகைகளை போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.

கன்னிப்பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களிடம் கொஞ்சம் தள்ளியிருங்கள். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளை கவனமாக எழுதுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம்.

மாணவ-மாணவிகளே! உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள். பொழுது போக்குகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தவறான பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கணிதம், ஆங்கிலப் பாடங்களில் அதிக அக்கறை காட்டுங்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். ஆனால் வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

அரசியல்வாதிகளே! சபை நாகரிகம் அறிந்து பேசுங்கள். தலைமையுடன் விவாதம் வேண்டாம். கௌரவப் பதவி உண்டு. சகாக்களை அடக்கி வாசிக்க சொல்லுங்கள். விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் கோர்ட், கேஸ் என்று போகாமல் சுமுகமாக பேசி தீர்க்கப்பாருங்கள். எண்ணெய் வித்துக்கள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். ஆகமொத்தம் இந்த 2018ம் ஆண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் தன் கையே தனக்குதவி என்பதை உணர்த்துவதாக அமையும்.

கும்பம்
பாசத்தால் அனைவரையும் கட்டிப் போடுபவர்களே! கடமைத் தவறாதவர்களே! காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்துபவர்களே! உங்களுடைய சப்தமாதிபதியான சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த 2018ம் ஆண்டு பிறப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே உங்களுடைய ராசிநாதனும் விரையாதிபதியுமான சனிபகவான் ராசிக்கு லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கையுடன் தலை நிமருவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் அஷ்டமதனாதிபதியுமான குருபகவான் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பல முறை முயன்றும் முடிக்க முடியாத வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள்.

தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவர்வழி உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 10ம் வீட்டில் நுழைவதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் அச்சப்படுவீர்கள்.

1.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியன் சனியுடன் சேர்வதால் இக்காலக்கட்டத்தில் போராட்டங்களைச் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்விக சொத்தால் வருமானம் வரும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் சின்ன சின்ன காரியங்கள் கூட தடைப்பட்டு முடிவடையும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். பணப்பற்றாக்குறையும் இருக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. சொத்துக்களை விற்கும் போதும் ஏமாந்துவிடாதீர்கள். சிலர் சின்ன தொகையை முன்பணமாக கொடுத்து விட்டு ஆறு மாதம், ஏழு மாதம் கழித்து மீதித் தொகை தராமல் இழுத்தடிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். 02.05.2018 முதல் 30.10.2018 வரை ராசிநாதன் செவ்வாய், கேதுவுடன் இணைவதால் சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல் போகும். தவறு செய்யாமலேயே உங்களை சிலர் குற்றவாளியாக்க முயற்சி செய்வார்கள். கூடாப்பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கியும் பேச வேண்டாம், தூக்கியும் பேச வேண்டாம்.

பணம் வாங்கித் தருவதிலும், கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்காதீர்கள். 11.6.2017 முதல் 04.7.2018 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வாகனம் பகுதாகும். கணவன்-மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம். புத்தாண்டு தொடக்கம் முதல் வருடம் முடியும் வரை ராகு 6ம் வீட்டில் தொடர்வதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அதிக வட்டிக் கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.

எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களுக்கும் அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். புது பதவிகள் தேடி வரும். ஆனால் கேது 12ம் வீட்டில் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சில நாட்களில் தூக்கம் குறையும். திட்டமிடாத பயணங்களும், அலைச்சல்களும் இருந்துக் கொண்டேயிருக்கும். உறவினர் வீட்டு திருமணம், கிரகப் பிரவேசத்தை நீங்களே செலவு செய்து எடுத்து நடத்துவீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரிகளே! இரட்டிப்பு லாபம் உண்டாகும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டு. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுப்படுத்துவீர்கள். முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர், ஆட்டோ மொபைல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். விலகிச் சென்ற நம்பிக்கையான பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்யோகஸ்தர்களே! தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சில சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களும் மதிப்பார்கள். கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தி அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். வேலை கிடைக்கும். கல்வியும் இனிக்கும், காதலும் இனிக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.

மாணவ-மாணவிகளே! பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். கட்டுரை, கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வரும். போட்டிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். மாநில அளவில் புது பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினரே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.

விவசாயிகளே! தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்க கடன் உதவிகள் கிடைக்கும். பூச்சித் தொல்லை, வண்டுக் கடியிலிருந்து பயிரை காப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். இந்த 2018ம் ஆண்டு உங்களை விஸ்வரூபமெடுக்க வைப்பதுடன், திடீர் யோகங்களையும், வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.

மீனம்
அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், தனக்கென ஒரு பிரச்னை வந்தால் தடுமாறுவீர்கள். உங்களுடைய முயற்சிஸ்தானமான 3வது ராசியில் இந்த 2018ம் ஆண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சாதூர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். இந்த ஆண்டு முழுக்க ராகு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பொறுப்பில்லாத் தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீக சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வது நல்லதல்ல. கேது உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் அமர்வதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களுக்காக எவ்வளவு செய்தும் நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் ராசிநாதனும் உத்யோகஸ்தானாதிபதியாகிய குருபகவான் 8ம் வீட்டில் நிற்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும் என்றாலும் திடீர் பணவரவும் உண்டு.

சொந்தபந்தங்களுக்காக சில சமயங்களில் அலைய வேண்டி வரும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 9ம் வீட்டில் சென்று அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அலைந்தீர்களே, கவலை வேண்டாம் அழகான வாரிசு உண்டாகும். செவ்வாய் 8ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். சொத்து விஷயங்களை சுமுகமாக பேசித் தீர்க்கப் பாருங்கள்.

இந்தாண்டு முழுக்க உங்கள் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனிபகவான் 10ல் தொடர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். நட்பு வட்டம் விரியும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பொது விழாக்களை தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 13.01.2018 வரை உள்ள காலக்கட்டங்களில் சூரியனுடன் சனியும் சேர்ந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அலுவலகத்தில் அவ்வப்போது தொந்தரவுகள் வந்து நீங்கியபடியே இருக்கும். 10.03.2018 முதல் 02.05.2018 வரை சனியுடன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் உத்யோகத்தில் மரியாதை குறைவான சம்பவங்கள் நிகழக் கூடும். மேல் அதிகாரியுடன் பணிப்போர் வந்து நீங்கும்.

02.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் இணைந்திருப்பதால் இக்காலக்கட்டங்களில் வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள்,தொழிலதிபர்களின் நட்பை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். 5.7.2018 முதல் 1.8.2018 வரை சுக்ரன் 6ல் நிற்பதால் சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். குடிநீர், கழிவு நீர் குழாய் அடைப்பு வரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சளித்தொந்தரவு இருக்கும். சைனஸ் இருப்பதைப் போன்ற லேசாக தலை வலி வந்துப் போகும்.

வியாபாரிகளே! முன்பு இருந்த போராட்டம், தடைகள் நீங்கி இப்போது மனநிறைவுடன் காணப்படுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக செயல்படுவீர்கள். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி அதிக லாபம் ஈட்டுவீர்கள். உணவு,ஷேர், சிமெண்ட், செங்கல்,ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சனை தந்த பங்குதாரரை மாற்றுவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! அதிகாரிகளால் பந்தாடப்பட்டீர்களே! செல்வாக்கு இருந்தும் நீங்கள் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்காமல் திண்டாடினீர்களே! மாற்றம் வரும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. மேலதிகாரியிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி நட்புறவாடுவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலக சூட்சுமங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணினி துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரும்.

கன்னிப்பெண்களே! வெலுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்தீர்களே, இனி அந்த அவல நிலை மாறும். காதல் கைகூடும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். நினைத்தபடி உயர்கல்வியை தொடர்வீர்கள். கலை,இலக்கியத்தில்,இசையில் ஆர்வம் பிறக்கும். மாதவிடாய்க் கோளாறு, தொண்டை வலி, சளித்தொந்தரவு நீங்கும்.

மாணவர்களே! சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாலையில் எழுந்து படியுங்கள். நினைவாற்றல் பெருகும். கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! பதவி உயர்வு உண்டு. மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினர்களே! அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். விவசாயிகளே! வங்கிக் கடன் கிடைக்கும். காய், கனி, கிழங்கு வகைகளால் லாபம் பெருகும். இந்தப்புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை ஏமாற்றினாலும், மையப் பகுதியிலிருந்து உங்களை ஏற்றத்தில் உயர்த்தி விடுவதாக அமையும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: