துண்டு துண்டாக வெட்டப்பட்ட 9 பெண்களின் உடல்கள்! நாட்டையே கலக்கிய சம்பவம்!

0
139

துண்டு துண்டாக வெட்டப்பட்ட 9 பெண்களின் உடல்கள்! நாட்டையே கலக்கிய சம்பவம்!

துண்டு துண்டான வெட்டப்பட்ட பெண்களின் உடல்கள் ஜப்பானிலுள்ள மாடி வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ருக்கிறது.

இது தொடர்பாக ஜப்பானில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஜப்பான் தலைநகர் தோக்கியோவின் தெற்கு பகுதியான ஸாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் நேற்று ஒரு குளிர்பதனப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பெட்டிக்குள் 2 மனித தலைகள் இருந்துள்ளன.

இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து சோதனையிட்ட போது நெஞ்சை உறைய வைக்கும் விதமாக அங்கு 9 சடலங்கள் இருந்துள்ளன. அதில் 8 பெண் சடலங்களும் ஓர் ஆண் சடலமும் அடங்கும். சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலிசார் அந்த வீட்டில் தங்கியிருந்த ஷிராய்ஷி (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

எனினும், வீட்டில் இருந்த சடலங்கள் தொடர்பாக தெளிவான காரணங்களை போலீசார் கூறவில்லை. இந்தக் கோரச் செயலை ஒப்புக்கொண்ட ஷிராய்ஷி “நான் அவர்களை கொன்றேன் மற்றும் ஆதாரங்களை மறைக்கும் பொருட்டு உடல்கள் துண்டு துண்டாக்கினேன்” என கூறினான்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவான 23 வயது பெண் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக அந்தப் பெண் தனது டுவிட்டரில் “நான் என்னுடன் மரணம் அடைய யரையாவது தேடுகிறேன், எனக் கூறி இருந்தார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: