திருமண பதிவிற்கு கட்டாயமாகிறது ஆதார் அட்டை! அரசின் புதிய அறிவிப்பு.

1
104

திருமண பதிவிற்கு கட்டாயமாகிறது ஆதார் அட்டை! அரசின் புதிய அறிவிப்பு.

சென்னை: திருமணங்களை பதிவு செய்ய ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பதிவுத்துறைத்தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கை வருமாறு:-
மணமக்கள் பெற்றோர் மற்றும் சாட்சிகளின் அடையாள ஆதார ஆவணமாக ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களுடன் தற்போது ஆதார் அட்டையையும் ஒரு அடையாள ஆவணமாக ஏற்று பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அரசு சேவை பெற இதனை ஆதாரமாக கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை குடியுரிமை ஆதாரமாகவோ அல்லது இருப்பிட ஆதாரமாக ஏற்க இயலாது என மேற்படி சட்டபிரிவு 9-ல் எடுத்துரைக்கப்பட்ட நிலையில் இதனை அடையாள ஆதாரத்திற்கான ஆவணமாக மட்டுமே ஏற்க தெரிவிக்கப்படுகிறது.

மணமக்களின் பெற்றோரது பெயர்கள், மற்றும் முகவரிகளை சரி பார்க்கும் பொழுது. அவர்கள் தாக்கல் செய்யும் ஆதார ஆவணங்களில் கண்டுள்ள பெயர் மற்றும் முதலெழுத்தும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பெயர் மற்றும் முதலெழுத்தும் மற்றும் முகவரின் ஒத்துள்ளதா என பதிவு அலுவலர்கள் நன்கு பரிசீலித்த பின்னரே பதிவு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. மணமக்களின் பெற்றோர் யாரேனும் இறந்து விட்டதாக விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இறந்தவரின் அசல் இறப்பு சான்றை சரிப்பார்த்து அதன் நகல் பெறப்பட்டு கோர்வை செய்யப்பட வேண்டும், மேலும் மணமக்களில் யாரேனும் ஒருவர் கணவர் அல்லது மனைவியை இழந்தவர் என விண்ணப்பத்தில் குறிப்பிடும் நிகழ்வில் இறந்த கணவர், மனைவியின் இறப்பு சான்றின் அசலை சரிப்பார்த்து அதன் நகலை கண்டிப்பாக பெற்று கோர்வை செய்த பின்னரே பதிவு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: