திருமணமான அன்றே காதல் ஜோடி தற்கொலை!

0
140

இந்திய மாநிலமான ஆந்திராவில் திருமணமான அன்றே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் பட்டுல்லா சந்தீப், இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகின்றார். மேலும் அதே கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போகிரெட்டி மவுனிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

தங்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டைவிட்டு கிளம்பிய இவர்கள் விஜயவாடாவில் திருமணம் செய்துள்ளனர்.

அதன் பின்பு அன்று இரவே தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்களது சடலங்களை ரயில் நிலையத்தில் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இவ்வாறு அவர்கள் திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தனது குடும்பத்திற்கு பயந்து இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

கலங்க வைக்கும் காரணம்
கலங்க வைக்கும் காரணம்
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: