திருமணத்திற்கு முன் தனி தனியாக ஓடிபோன மணமக்கள்.!! சோகத்தில் குடும்பம்.!!

0
38

கர்நாடக மாநிலத்தை அடுத்த மலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாற்று திறனாளியான குரேஷ்.

இவருக்கும் சவுமியா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கபட்டது.

பின்னர் திருமண ஏர்பாடுகள் முடிந்து திருமணத்திற்கு முன்னாள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சவுமியா மற்றும் அவரது வீட்டாளர்கள் யாரும் வரவில்லை.

பின்னர் இந்த திருமணத்தில் சவுமியாவுக்கு விருப்பம் இல்லாததால் அவர் வீட்டை விடு ஓடிய சம்பபவம் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து நிச்சயிக்கப்பட்ட திருமணத்தி நிறுத்தாமல் சவுமியாவின் தூரத்து சகோதரியான ஒரு பெண்ணை குரேஷ்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அப்போது குரேஷ் தான் அழகு நிலையம் சென்று மேக்கப் எய்து வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார்.

வெளியே போன அவரும் நீண்ட நேரமாக ஆகியும் வரவில்லை. பின்னர் அவரும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் அவரும் ஓடி போன சம்பவம் தெரிய வந்தது.

இதனால் இரு தரப்பு வீட்டார்களும் சோகத்தில் முழ்கினர்.திருமணத்திற்கு முன் மணமகள், மணமகன் இருவருமே தனித்தனியாக ஓடிப்போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: