திருப்பதி சென்ற பக்தர்கள் வாகனம் விபத்து 9 பேர் பலி!

0
68

திருப்பதி சென்ற பக்தர்கள் வாகனம் விபத்து 9 பேர் பலி!

மணப்பாறை: துவரங்குறிச்சி அருகே நேற்றிரவு திருப்பதி கோயிலுக்கு சென்ற வேன் போர்வெல் வாகனம் மீது மோதிய விபத்தில் 4 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை என 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நாகர்கோவில் தெற்கு குளத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (79). இவர் உறவினர்கள் மற்றும் குடும்பத்துடன் டெம்போ வேனில் நேற்று திருப்திக்கு புறப்பட்டார். டெம்போ வேனில் டிவைர் உள்பட 14 பேர் இருந்தனர்.

வேன் நேற்றிரவு 11.30 மணியளவில் மதுரையை கடந்து திருச்சி நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி ஊருக்குள் செல்லும் சர்வீஸ் ரோட்டில் வேன் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனில் இருந்த வைத்திலிங்கம் உள்பட 4 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகிய 9 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். இதுபற்றி தகவலறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேரம் போராடி 4 பேரை படுகாயத்துடன் மீட்டனர். அவர்கள் மணப்பாறை, திருச்சியில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்கள் யார் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: