திருடிய தாலியை பிரேம் போட்டு மாட்டி வைத்த திருடன்! அதிர்ச்சி காரணம்!

0
183

தமிழகத்தில் பெண்ணின் தாலி சங்கலியை பறித்து பிரேம் போட்டு மாட்டி வைத்திருந்த நபர் கூறிய காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சைதாப்பேடையில் வசித்து வரும் பார் உரிமையாளர் செல்வகணேஷ் என்பவரின் மனைவி குணசுந்தரி கடந்த 21-ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபரால் தாக்கப்பட்டார்.

அவரை தாக்கிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கலியை நபர் ஒருவர் பறித்து செல்லும் காட்சிகள் அப்பகுதியின் சிசிடிவி கமெரா ஒன்றில் பதிவாகியிருந்தது.

அதன் உதவியுடன் தேடுதல் வேட்டையை தொடங்கிய பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்சன் என்னும் நபரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

திருடிய நகை எங்கே என கேட்ட பொலிசார் திகைக்கும் வகையில், நகையை பிரேம் போட்டு மட்டியுள்ளதை காட்டியுள்ளார் ஜான்சன்.

திருடிய நகையை விற்றுவிடுவது தான் திருடர்களின் வழக்கம், நீ என்ன டா பிரேம் போட்டு மாட்டி வச்ச்சிருக்க ? என பொலிசார் கேட்க, அதற்கு “சார், திருடுனன்னு சொல்லாதிங்க. அது என் முன்னாள் காதலியோட தாலி!” என கூறியுள்ளார்.

ஜான்சன் கூறியதை கேட்டு திகைத்த பொலிசார், காதலியின் பெயரை கேட்டபோது ஜான்சன் தவறாக கூறியுள்ளார். குணசுந்தரியின் போட்டோவை காட்டியதும் யார் இவர் என ஜான்சன் கேட்டதால் தவரு நடந்திருப்பதை பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், ஜான்சன் சைதாப்பேட்டையில் வசித்தபோது அவருக்கு ஒரு பெண்ணுடன் காதல் இருந்துள்ளது. அந்த பெண்ணுக்கு தற்போது வேறு நபருடன் திருமணம் ஆகியதால் குடி போதையில் அந்த பெண் தான் இந்த பெண் என ஜான்சன் தவறாக நினைத்து குணசுந்தரியின் சங்கிலியை பறித்து சென்றுள்ளார் என கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் ஜான்சனை கைது செய்து சிரையில் அடைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: