திருகோணமலை கடத்தலில் வெளியான பரபரப்புக் காணொளி!

0
75

கடந்த 05 ஆம் திகதி திருகோணமலையினை சேர்ந்த நபர் ஒருவர், கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தப்பட்டதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்ட நபர், கப்பம் பெறும் நபர்களினால் கடந்த 07 ஆம் திகதி மிரிஸ்வத்த பிரதேசத்தில் விட்டு செல்லப்பட்டிருந்ததாக காவற்துறை தெரிவித்தது.

குறித்த நபரை விடுதலை செய்வதற்கு கடத்தப்பட்ட நபரின் குடும்பத்தினர், 25 லட்சம் ரூபா பணத் தொகையினை வழங்கியதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் பெண் ஒருவரும் தொடர்பு பட்டுள்ளதாக காவற்துறை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு அந்த பிரதேசத்தில் உள்ள சி.சி.டி.வி காணொளியினை காவற்துறை பெற்றுக் கொண்டதனை, ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

காவாற்துறை இவ்வாறு ஊடகங்களுக்கு வெளியிட்ட சி.சி.டி.வி காணொளி இணைப்பு..

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: