தினம் தினம் மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவன்.

0
171

சென்னை மாமல்லபுரத்தை அடுத்த மணமலையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.

இங்கு படிக்கும் சுமார் 40 மேற்பட்ட மாணவிகள் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து விடுதி போல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதே கல்லூரியில் படிக்கு மாணவர்களும் அதே குடியிருப்பில் தனியாக வாடகை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில் மாணவிகள் குளிப்பதை ஜன்னல் வழியாக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து இருப்பதாக தகவல் பரவியது.

மேலும் அதனை லேப்டாப்பில் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்தது. இதனை அறிந்த மாணவிகள் பின்னர் இது பற்றி குடியிருப்பு வாசிகளிடம் தெரிவித்தனர் .

அப்போது அதிர்ச்சியடைந்த அவர்கள் பிறகு மாணவனின் அறைக்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லாமல் மாயமாகியுள்ளார்.

இதனையடுத்து தலைமறைவான அந்த மாணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான மாணவனை தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: