திட்டமிட்டு 9 மாதக் குழந்தையைக் கொல்வதற்காக பார்ட்டிக்கு சென்ற தாய்!

0
69

பெற்றெடுத்த குழந்தையை பட்டினி போட்டுக் கொல்வதற்காக ஒரு இளம்பெண் ஒரு வாரம் பார்ட்டிகளுக்கு சென்றாள்.

பல நாட்களாக அவள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிஸ் வந்து பார்க்கும்போது குழந்தை இறந்து கிடந்தது.

மெலிந்து எலும்பும் தோலுமாக, கண்கள் மட்டும் திறந்திருந்த நிலையில் குழந்தை இறந்து கிடந்ததாக நீதிபதி தெரிவித்தார்.

17 வயதான ரஷ்யாவைச் சேர்ந்த Kuznetsova, தான் கல்லூரிக்கு செல்லத் தொடங்கும்போது தன் குழந்தையைக் கொல்லத் திட்டமிட்டாள்.

தனது கணவன் ராணுவத்திற்கு செல்லும் வரையில் காத்திருந்த Kuznetsova, அவன் சென்றதும் குழந்தையை வீட்டில் போட்டுவிட்டு பார்ட்டிகளுக்கு சென்றுள்ளாள்.

இடையில் ஒருமுறை வீட்டுக்கு வந்த அவள், தனது நாய்க்கு தண்ணீர் கொடுத்திருக்கிறாள், ஆனாலும் அவள் குழந்தையைக் கவனிக்கவே இல்லை.

உணவும் நீரும் இல்லாததால் குழந்தை இறந்துபோனதாக நீதிபதி தெரிவித்தார்.

குழந்தைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்தபோது உணவும் நீரும் இல்லாததால் அதன் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்தது தெரிய வந்தது.

அவளுக்கு ஆறரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பைக் கேட்ட Kuznetsova, எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் நின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவள் குழந்தையைக் கொன்றதற்கான காரணம் தெரியவில்லை.

ஏற்கனவே குழந்தைக்கு ஒரு மாதமாக இருக்கும்போது அதைக் கொண்டுபோய் ஒரு அனாதை விடுதியில் விட முயன்று தோற்றிருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ட்டிக்கு சென்ற தாய்
பார்ட்டிக்கு சென்ற தாய்
உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: