தாயை கொன்று இதயத்தை சட்னியில் தொட்டு சாப்பிட்ட மகன்.

0
210

தாயை கொன்று இதயத்தை சட்னியில் தொட்டு சாப்பிட்ட மகன்

இந்தியாவில் மகன் ஒருவன் தாயை கொன்று அவரின் இதயத்தை சட்னியில் தொட்டு சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே டரராணி சவுக்கில் உள்ள மகவாலா வசத் பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சுனில் குசகுர்ணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுனிலின் மனைவி 3 குழந்தைகளுடன் அவரின் தாயார் வீட்டில் வசித்து வரும் நிலையில், சுனில் தனது வீட்டில் தாயுடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அளவுக்கதிகமான போதையில் பசியுடன் சுனில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் சுனிலுக்கும், தாயர் ஏலெவாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த சுனில், தாயை அடித்து கொன்றுள்ளார். கையில் ரத்தம் சொட்ட சொட்ட சுனில் வெளியே வந்த போது, அதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் சுனிலை கைது செய்துள்ளனர்.
பொலிசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஏலெவாவின் இதயம் அறுத்து எடுத்து ஒரு தட்டில் வைக்கப்பட்டு, அதனருகில் சட்னி மற்றும் மிளகு துாள் இருந்துள்ளது.மேலும், இதயத்தில் சில பகுதிகள் கடிக்கப்பட்டிருந்துள்ளது. இதனால், அதனை அவர் சாப்பிட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகமடைந்துள்ளனர். சுனிலை கைது செய்து பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: