தாயின் கள்ளக்காதலால் மகளுக்கு வந்த கதி விபரீதத்தில் முடிந்தது!

0
210

தாயின் கள்ளக்காதலால் மகளுக்கு வந்த கதி விபரீதத்தில் முடிந்தது!

கெலிடோ கடற் பரப்பில் இன்று, தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள பெண் ஒருவரும் அவரது மகளும் வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த இரண்டு பேரையும், தகாத உறவில் ஈடுப்பட்டு வந்துள்ள நபரே வெட்டியுள்ளதுடன், அங்கு இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஹொரனை பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணும், அவரது 18 வயதுடைய மகளுமே

இதன்போது வெட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணின் கணவர் தொடர்பில் தகவல் அறியப்படாததுடன், இதற்கு முன்னர் புலத்சிங்கள – மஹகம பிரதேசத்தில் அவர்கள் இருந்துள்ளதுடன், தகாத தொடர்பு ஒன்றின் காரணமாக கள்ளக் காதலன் சிறையில் இருந்துள்ள போது, றய்கம பிரதேசத்திற்கு சென்று அங்கு தங்கியுள்ளனர்.

இந்நிலையில், சிறையில் இருந்து கள்ளக் காதலன் விடுதலையாகி, தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணை நலம் விசாரிப்பதற்கு றய்கம பிரதேசத்திற்கு நேற்றைய தினம் சென்றுள்ளார்.

பின்னர் மூன்று பேரும் அளுத்கமையில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து அதிகாலை நேரம் களுத்துறை கடற் பரப்பிற்கு அருகாமையில் இருந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் மகள், கெலிடொ கடற்கரை பகுதியின் அருகாமையில் உள்ள வீடு ஒன்றுக்கு வெட்டு காயங்களுடன் சென்று ” தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு , தனது தாயின் கள்ளக் காதலன் முயற்சித்ததாகவும் மற்றும் தனது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்ததற்கு இவ்வாறு வெட்டி காயப்படுத்தியதாகவும்” தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த வீட்டில் உள்ளவர்கள் களுத்துறை காவற்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன், அங்கு காவற்துறை விரைந்து இருவரையும் நாகொடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சந்தேக நபர் புலத்சிங்கள பகுதியில் மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், மீன் வெட்டும் கத்தியினால் இவ்வாறு வெட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், களுத்துறை வடக்கு காவற்துறையினால் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: