தற்போது! வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
99

தற்போது! வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் 27ம் முதல் வளிமண்டலத்தில் ஏற்படவுள்ள குழப்பநிலை காரணமாக கிழக்கு கடற்பிரதேசத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், மழையுடன் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் , முல்லைத்தீவு , கோகிளாய் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் சில தினங்களில் கடல் தொடர்ந்தும் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: