தமிழர் ஒன்றிணைவு! கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் மற்றும் டக்ளஸ் இணைவு

0
73

தமிழர் ஒன்றிணைவு! கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் மற்றும் டக்ளஸ் இணைவு

வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி சபைகளில் ஆகக்கூடிய ஆசனங்களை பெற்ற கட்சிகள் அந்த சபைகளை சீராக நடத்த பூரண ஒத்துழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருப்பதாக அறிய முடிகிறது.

நிபந்தனை அற்ற ஆதரவு அவர்களுக்கு வழங்கப்படும். உதாரணமாக யாழ். மாவட்டத்தில் இரு நகரசபைகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றி இருக்கிறது.

இரு பிரதேசசபைகளை ஈ.பி.டி.பி கைப்பற்றி இருக்கிறது. இந்த இரு கட்சிகளும் நிர்வாகத்தை நடத்த ஆளும் தரப்பில் இல்லாமல் வெளியில் இருந்து கொண்டு சபை சீராக இயங்க ஒத்துழைப்பு வழங்குவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: