தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லிப்ரில் மாட்டியதால் ஏற்பட்டது பரபரப்பு.

0
49

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லிப்ரில் மாட்டியதால் ஏற்பட்டது பரபரப்பு.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிக்கிக்கொண்டார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு 7 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தார். அவர் செல்ல வேண்டிய விமானம் இரவு 7.30 மணிக்கு புறப்பட இருந்தது. அவர் முன்னதாகவே வந்து விட்டதால் 3வது மாடியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கும் ஓய்வு அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன் பின்பு விமானம் புறப்படும் நேரம் நெருங்கியதும் முதல்வர் 3வது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு வருவதற்காக லிப்ட்டில் ஏறினார். அவருடன் அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர், முக்கிய பிரமுகர்கள் அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேர் உள்பட 7 பேர் லிப்ட்டில் ஏறினர்.

லிப்ட் 3வது தளத்தில் இருந்து கீழே இறங்கும் போது 3வது தளத்திற்கும், 2வது தளத்திற்கும் இடையே லிப்ட் பழுதடைந்து நின்று விட்டது. ஆனால் அவருடைய வருகையை எதிர்பார்த்து தரை தளத்தில் போலீஸ் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். இதற்கிடையே லிப்ட் பழுதடைந்து நின்றதால் முதல்வருடன் வந்த பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது பாதுகாவலர்கள் அவசர கால சைரனை ஒலிக்கச் செய்தனர். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்து அந்த லிப்ட்டை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 5 நிமிடத்தில் லிப்ட் சரி செய்யப்பட்டது. அதன் பின்பு அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் இதே லிப்ட்டில் தரை தளம் வரை செல்ல வேண்டாம் என முதல்வரிடம் கூறினர். பின்னர் முதல்வர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் லிப்ட்டில் இருந்து 2வது தளத்திலேயே இறங்கி விட்டனர்.

பின்னர் அங்கிருந்து எஸ்கலேட்டர் மூலமாக முதல்வரை கீழே அழைத்து வந்தனர். பின்பு அங்கிருந்த தனியார் வாகனத்தில் முதல்வரை விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் விமானம் சுமார் 15 நிமிடம் தாமதமாக இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு முதலமைச்சர் செல்லும் போது எப்படி லிப்ட் பழுதடைந்தது. ஏற்கனவே அந்த லிப்ட்டை சரி பார்க்கவில்லையா என விமான நிலைய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: