தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் இனி தொலைக்காட்சி இல்லை!டிச 31-க்கு பின் அமுலுக்கு வருகிறது!

0
56

தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் இனி தொலைக்காட்சி இல்லை!டிச 31-க்கு பின் அமுலுக்கு வருகிறது!

சென்னை: தமிழகத்தில் வரும் டிச 31-க்கு பிறகு தனியார் பேருந்துகளில் தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு சாதனங்கள் பயன்படுத்துவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவினருடன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் படி டிச.31-க்குள் சுமார் 7,000 பேருந்துகளில் தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்கள் நீக்கப்பட உள்ளது. இது தொடர்பாக அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு பேருந்துகளில் இருந்து தொலைக்காட்சி பார்க்கும் வசதி நீக்கப்பட்ட நிலையில் இனி தனியார் பேருந்துகளிலும் தொலைக்காட்சியில் படம் பார்ப்பது, பாடல்கள் கேட்கும் வசதிகளை அனுபவிக்க முடியாது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: