தமன்னா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் மதுரை ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
46

தமன்னா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் மதுரை ரசிகர்கள் கொண்டாட்டம்!
விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தினை அடுத்து நடிகை தமன்னா தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக மதுரை சென்றுள்ள தமன்னா இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் சென்ற தமன்னா மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதிகளுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகை தமன்னா வந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு திரண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின், தரிசனம் முடிந்து வெளியில் வந்த தமன்னாவை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: