தந்தை வயதை ஒத்த முதியவருடன் இளம்பெண்ணுக்கு கட்டாய திருமணம்! நடந்தது என்ன?

0
155

தந்தை வயதை ஒத்த முதியவருடன் இளம்பெண்ணுக்கு கட்டாய திருமணம்! நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலம் கைருவாலா கிராமத்தை சேர்ந்த இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இதனை அறிந்த பெற்றோர் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

திருமணம் செய்ய போகும் அந்த நபருக்கு வயது 45. அந்த பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.

ஆனாலும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி ஒரு இடத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு திருமண ஏற்பாடுகள் தயாராக இருந்ததை பார்த்த அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் தன்னை விட்டு விடும்படி தரையில் புரண்டு அழுதார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

மயக்க நிலையிலேயே அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. மயக்கம் தெளிந்து பார்த்தபோது திருமணம் நடந்ததை அறிந்து கத்தி கூச்சல் போட்டார்.

இதனால் அங்கு கும்பல் கூடியது. இதனை அடுத்து அந்த பெண்ணை ஒரு அறையில் போட்டு அடைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டனர். திருமணம் செய்த 45 வயது நபரை கைது செய்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: