தந்தையுடனான தகராறில் பிள்ளைகளை வெட்டிக் கொன்ற கொடூரன்.

0
66

தந்தையுடனான தகராறில் பிள்ளைகளை வெட்டிக் கொன்ற கொடூரன்.

தனது தந்தையின் நண்பரால் வெட்டுக் கத்தியால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். அச்சிறுவனின் மூன்று வயது தங்கை வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கியூலுவிலுள்ள கம்போங் லூபோக் என்ற இடத்தில் இக்கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. மரணமடைந்த அச்சிறுவனின் தந்தைக்கும் அவருடன் வேலை செய்யும் ஆடவனுக்கும் அவர்களின் வீட்டில் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அச்சிறுவர்களின் தந்தை, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அவரின் அச்செயலால் ஆத்திரம் அடைந்த அந்த ஆடவன், அந்தச் சிறுவர்களை வெட்டுக் கத்திக் கொண்டு சராமாரியாக தாக்கியுள்ளான்.

இந்தக் கொலைச் சம்பவத்தை உறுதிப்படுத்திய வட்டார போலீஸ் தலைவர் துணை சூப்ரிண்ட். ஜுல்பஹாரின் இஸ்மாயில், இக்கொலைக்கான நோக்கம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டம் 302-ஆம் பிரிவின் கீழ் இந்த கொலைச் சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: