தகாத வார்த்தைகளை பயன்படுத்தி நாமல் யாரை திட்டிதீர்த்தார் தெரியுமா!!

0
97

ராஜபக்ச குடும்பத்தில் இதுவரை அரசியலுக்கு வராத ஒருவரே அடுத்த அரசியலின் பிரபல கதாபாத்திரமாக மாறுவார் என சுமனதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த நாமல் ராஜபக்ச கடும் கோபமடைந்து, உடனடியாக சோதிடருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுளார்.

“நீ எங்களை ஒரு முறை ஏமாற்றிவிட்டாய். மீண்டும் ஏமாற்ற பார்க்கின்றாயா? கோத்தபாயவை தூண்டிவிடும் வேலையை செய்து வருகின்றாய் என எங்களுக்கு தெரியும். கிழவனே உனக்கு நான் என்ன செய்யப்போகின்றேன் என பார்..” என தகாத வார்த்தைகளை பயன்படுத்தி நாமல் சுமனதாஸவை திட்டியுள்ளார்.

வயதை கூட மதிக்காமல் நாமல் திட்டுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்த சுமனதாஸ “அதிகம் கூச்சலிடாதீர்கள் நாமல் பேபீ. அந்த கோப்பில் என்னிடம் பல விடயங்கள் உள்ளது.” என சுமனதாஸ குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் ஒரு வார்த்தையேனும் பேசாமல் நாமல் தொலைபேசியை துண்டித்துள்ளார்.

அதற்கு அடுத்த நாள் சுமனதாஸவுக்கு அழைப்பேற்படுத்திய மஹிந்த, “என்ன சுமனே அந்த பக்கம் வருவதே இல்லை. என்ன நடந்தது?” என வினவியுள்ளார். “நாமல் பேபீ பேசுவதனை கேட்டால் அந்த பக்கம் எப்படி வருவது? என கூறிய சுமனதாஸ சம்பவத்தை மஹிந்தவிடம் அவர் விபரித்துள்ளார்.

அவரை கண்டு கொள்ள வேண்டாம்.. இளம் பருவம் அப்படி தான். அவருக்கு கோபம் வந்தால் வாயில் வருவதை பேசிவிடுவார் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார். நாமலை வேறு நாட்டிற்கு அனுப்பி விடுங்கள் இல்லை என்றால் அரசியல் செய்ய முடியாது. இப்படியே சென்றால், அவருக்கு சிறையிலேயே இருக்க நேரிடும். குடியுரிமையும் இரத்து செய்யப்படலாம் என சுமனதாஸ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: