டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவாக அவரின் சில பொன்மொழிகள்!!

0
48

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவாக அவரின் சில பொன்மொழிகள்!!

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 86ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அறிவியல் துறையில் பல சாதனைகளை புரிந்த அவர், குழந்தைகளை சந்தித்து பேசுவதில் விருப்பம் கொண்டிருந்தார். குழந்தைகளிடையே அவர் ஆற்றிய பல உரைகள் பிரபலமானவை. அவ்வற்றிலிருந்து சில பொன்மொழிகளை தொகுத்து வழங்குகிறோம்.

apdul kalam with mandela
apdul kalam with mandela

“கனவு காணுங்கள். ஆனால், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல, உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு.”

“நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.”

“கனவு காணுங்கள். கனவு எண்ணங்கள் ஆகும், எண்ணங்கள் செயல்கள் ஆகும்.”

apdul kalam with shah rukh khan
apdul kalam with shah rukh khan

“உன்னுடைய இலக்கினை அடையும் வரை, மிகவும் கடினமான சண்டைகளை நீ போட வேண்டும்.”

“நீ யார் என்பது முக்கியமல்ல. உனக்கென்று ஒரு பார்வை இருந்து, அதை அடையக்கூடிய உறுதி உனக்கு இருந்தால், நீ நிச்சயம் அதை செய்வாய்.”

“புத்தகங்களே நிரந்தர தோழர்கள். சில நேரங்களில், அவை நமக்கு முன்பு பிறக்கின்றன, நம் வாழ்க்கை முழுவதும், நம்மை வழிநடத்துகின்றன. பல தலைமுறைகளுக்கு அவை தொடர்கின்றன.”

apdul kalam illness
apdul kalam illness

“படைப்பாற்றல் என்பது, ஒரே விஷயத்தை பார்த்தாலும், அதை வேறு வழியில் சிந்திப்பது.”

“நாம், நமது நம்பிக்கைகளை போல இளமையாகவும், நம் சந்தேகங்களை போல முதுமையாகவும் இருக்கிறோம்.”

“நீங்கள் சூரியனை போல ஒளிர வேண்டும் என்றால், முதலில், சூரியன் போல எரிய வேண்டும்.”

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: