ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரின் வாகனம் மோதியதில் பறிபோன இரு சகோதர்களின் மூச்சு.

0
103

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரின் வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நாடு பூராகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

accident
accident

ஜனாதிபதியின் சகோதரர் என தெரிவிக்கப்படும் லால் சிறிசேன என்ற சந்தேகநபரின் ஜீப் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொலன்னறுவை -ஹிங்குரக்கொட வீதியில், ஏதுமல்பிட்டிய பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த சகோதர்கள் இருவரில் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மணித்தியாலத்துக்கு சுமார் 140 கிலோ மீற்றர் வேகத்தில் வந்த லால் சிறிசேனவின் வாகனம் , மோட்டார்சைக்கிளை மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த சகோதரர்கள் பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். விபத்தின் பின் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற சந்தேகநபர் பின்னர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சந்தேகநபரான பல்லேவத்த கமராலாலேகே நேனசிரி பிரக்னரத்ன சிறிசேன , அப்பிரதேசத்தில் நன்கறியப்பட்ட வர்த்தகர் ஆவார்.
எல்.எம்.ஜே.எம். புத்ததாச என்ற 59 வயது நபரும் , அவரின் சகோதரரான 44 வயது எல்.எம்.ஜே.எம். ஜயரத்ன ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர்.
இவர்கள் ஹிங்குரக்கொட யடியல்பதம ,கஹுடில்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் புத்ததாச திருமணமாகாதவர் எனவும், ஜயரத்ன திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புத்ததாச சிறுநீரக நோயாளி எனவும், நேற்று இரவு பொலன்நறுவை வைத்தியசாலையில் சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: