சொந்த மண்ணில் வந்த சோதனை!!

0
64

சொந்த மண்ணில் வந்த சோதனை!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சித் தோல்வி வழங்கியது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஆட்டம் மும்பை வான் கடே மைதா னத்தில் நேற்று நடை பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

ஆரம்ப வீரர்களாக ரோகித் மற்றும் தவான்.9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் தவான்.20 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா.

இந்திய அணியின் தலைவர் கோக்லி ஒரு முனையில் நிலைத்துநின்றார். அவருக்கு நீண்ட இணைப்பாட்டத்தை வழங்க எவராலும் இயலவில்லை.

டினேஸ் கார்திக் 37 ஓட்டங்களையும், டோனி 25 ஓட்டங்களையும் சேர்த்த போதிலும் துடுப்பாட்டத்துக்குச் சாதகமான மும்பை வான்கடே மைதானத்தில் இமாலய இலக்கை நிர்ணயிக்கக்கூடிய வகையில் எவரும் அதிரடியானதொரு இன்னிங்ஸைக் கட்டமைக்கவில்லை.

இலக்குச் சரிவுகளால் அதிகம் நிதானித்துச் சதம் கடந்தார் கோக்லி. அவர் 121 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த 121 ஓட்டங்களுக்காக அவர் 125 பந்துகளை எதிர்கொண்டார். முடிவில் 8 இலக்குகளை இழந்து 280 ஓட்டங்களைக் குவித்தது இந்தியா.

பந்துவீச்சில் போல்ட் 4 இலக்குகளையும், சவுத்தி 3 இலக்குகளையும், சான்நெர் ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குக் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் 28 ஓட்டங்களுடன் ஆட்ட மிழந்தார் முன்றோ. 6 ஓட்டங்களுடன் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். ரெய்லர், லாதம் இருவரும் இணைந்து நீண்டு நிலைபெற்றனர்.

படிப்படியாக இந்தியாவின் வெற்றி கேள்விக் குறியானது. சதம் கடந்தார் லாதம். இணைப்பாட்டமாக 200 ஓட்டங்கள் பகிரப்பட்ட பின்னர் 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் ரெய்லர்.

எனினும் ஆட்டத்தை வெற்றி யுடன் முடித்தார் லாதம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: