சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 10 பேரை திருமணம் செய்த அழகு பெண்.!

0
42

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 10 பேரை திருமணம் செய்த அழகு பெண்.!
கேரளாவை சேர்ந்த ஷாலினி என்ற பெண் பணம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 10 திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இவர் பத்திரிக்கையில் கணவனை இழந்த இளம் விதவைக்கு மமணமகன் தேவை என விளம்பரம் செய்திருந்தார்.

அதில் அந்த பெண்ணின் செல்போன் நம்பரும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து இளைஞர் ஒருவர் தொடர்பு கொண்டார்.

அந்த பெண்ணின் பேச்சில் மயங்கியவரிடம், தான் கணவனை இழந்து பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருவதாக கூறினார்.

மேலும் கேரள கோர்ட்டில் வேலை கிடைக்கும். எனக்கு என யாரும் இல்லை என கண்ணீர் சிந்தி உள்ளார்.

இதனை நம்பிய இளைஞர் திருமண நாளையும் குறித்தார். திருமணத்திற்கு இளைஞரின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அந்த திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர் ஒருவருக்கு ஷாலினியின் மீது சந்தேகம் வந்தது. எனவே தனது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு வரவழைத்தார். வந்தவர் வேறு யாரும் அல்ல, அந்த பெண்ணின் முன்னாள் கணவர்.

அவரின் உதவியுடன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, இதே போன்று 10 பேரை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். அவர்களுடன் திருமணம் ஆன இரவு நகை, பணத்துடன் எஸ்கேப் ஆகி உள்ளார்.

அவர்களிடம் இருந்துத பல லட்சம் ரூபாய் ஏமாற்றி உள்ளார். அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: